PUBG போட்டியில் ஜெயித்தால் 50 லட்ச ரூபாய் பரிசு! - விளையாட நீங்கள் தயாரா? | Tencent Announces PUBG Mobile Campus Championship price worth Rs.50 Lakh

வெளியிடப்பட்ட நேரம்: 20:43 (07/09/2018)

கடைசி தொடர்பு:20:43 (07/09/2018)

PUBG போட்டியில் ஜெயித்தால் 50 லட்ச ரூபாய் பரிசு! - விளையாட நீங்கள் தயாரா?

PUBG

தற்போது, ஸ்மார்ட் போன்களில் பிரபலமாகிவரும் மொபைல் கேம் PUBG-யை விளையாடாதவர்கள் குறைவாகவே இருப்பார்கள். இதில் விளையாடுபவர்களுக்கு, வெளிநாடுகளில் PUBG போட்டிகள் நடத்தப்பட்டுவந்த நிலையில், தற்போது இந்தியாவிலும் அப்படி ஒரு போட்டி நடைபெற உள்ளது. இது, இந்தியாவில் நடக்கும் முதல் அதிகாரபூர்வ PUBG மொபைல் போட்டி என இந்த கேமின் உரிமையாளரான டென்சென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு 50 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும். இதற்காக டென்சென்ட் நிறுவனம், மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஓப்போவுடன் கைகோத்திருக்கிறது. நாடு முழுவதிலும் 30 நகரங்களில் இருந்து 1,000 கல்லூரிகள் இதில் பங்குபெறலாம் என எதிர்பார்ப்புள்ளதாக டென்சென்ட் நிறுவம் தெரிவித்திருக்கிறது.

வரும் செப்டம்பர் 26, 2018 முதல் 21 அக்டோபர் 2018 வரை இந்தப் போட்டிகள் நடக்கவிருக்கின்றன. இதில், அக்டோபர் 5-ம் தேதி வரை தகுதிப் போட்டிகள் நடைபெறும். அதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கான இறுதிப் போட்டி, பெங்களூரில் நடைபெறும். பணப் பரிசு தவிர பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பு விருதுகளும் வழங்கப்பட இருக்கின்றன. இது, இந்தியாவில் நடத்தப்படும் மிகப்பெரிய மொபைல் கேமிங் போட்டி என டென்சென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.