டூயல் சிம்... பட்ஜெட் விலை.... ஆப்பிளின் அடுத்த போனில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்!

ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர அறிமுக விழா இந்த வருடம் செப்டம்பர் 12-ம் தேதி ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்குத் தொடங்கும் இந்த விழாவில் ஆப்பிள் நிறுவனம் தங்களது புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தும். 

ஆப்பிள்

கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் X போனின் அப்டேட்டாக ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் ஆகிய போன்களை எதிர்பார்க்கலாம். புதிய ஐபோன் 9 மாடலும் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. மேலும் ஐபாட் ப்ரோ, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4, புதிய மேக்புக்களும் அறிமுகமாகும் என்று தெரிகிறது. மற்ற உபகரணங்களிலும் புதிய அப்டேட்களை. ஒரு பட்ஜெட் ஐபோன் கூட அறிமுகமாகலாம் என கூறுகின்றனர் நெருங்கிய டெக் வட்டாரங்கள். அதே நேரத்தில் சீனாவில் லீக் ஆனால் ஒரு புகைப்படத்தில் டூயல் சிம் வசதி இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இது  உறுதிப்படத்தப்படாத தகவல் தான், ஆனால் இது உண்மையாக இருந்தால் இதுவே ஆப்பிளின் முதல் டூயல் சிம் போனாக இருக்கும். அந்தப் படத்தில் இருக்கும் வார்த்தைகளை மொழிபெயர்த்தால் "புதிய ஐபோன் வந்துவிட்டது, நாம் காத்துக்கொண்டிருந்தது வந்துவிட்டது. டூயல் சிம், டூயல் நெட்ஒர்க், டூயல் 4ஜி" என்று பொருள்படும். ஆசிய சந்தையை குறிவைத்தே இந்த மாற்றத்தைச் செய்திருக்க கூடும் எனக் கூறப்படுகிறது. உண்மை என்ன என்பது விழா அன்று தெரிந்துவிடும்.

மேலும், உடனடி அப்டேட்களுக்கு அவர்களது ட்வீட்டை லைக் செய்தால் போதுமாம். இந்த விழாவை நேரடி ஒளிபரப்பாக ஆப்பிள் தளத்திலும் ட்விட்டரிலும் பார்க்கலாம் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!