இனிமேல் ஜியோ போன்களிலும் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தலாம்!

ஜியோ

ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் கீபேர்ட் போனான ஜியோ போனை கடந்த வருடம் அறிமுகப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக க்வெர்ட்டி (QWERTY) கீ-பேட் பட்டன்களைக் கொண்ட ஜியோபோன்-2 வையும் அறிமுகப்படுத்தியது. இந்த இரண்டுமே சந்தையில் வரவேற்பைப் பெற்றன. இந்த போன்களில் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தும் வசதி தரப்படும் என அண்மையில் ஜியோ அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் இனிமேல் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்த முடியும் என ஜியோ அறிவித்துள்ளது. KaiOS இயங்குதளத்துக்கென வாட்ஸ்அப் செயலியை அந்நிறுவனம் பிரத்யேகமாக உருவாக்கியுள்ளது. ஜியோ போனில் ஏற்கெனவே ஃபேஸ்புக், கூகுள் மேப்ஸ் போன்ற ஆப்கள் இருக்கும் நிலையில் தற்பொழுது வாட்ஸ்அப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
 

எப்படி டவுன்லோடு செய்வது?:

ஜியோ போனில் இருக்கும் ஆப்ஸ்டோரிலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். செப்டம்பர் 20-ம் தேதி முதல் அனைத்து ஜியோ போன் பயனாளர்களுக்கும் வாட்ஸ்அப் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஆண்ட்ராய்டு மொபைல்களில் பயன்படுத்துவதைப் போலவே இதிலும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும். ``இந்தியா முழுவதிலுமுள்ள லட்சக்கணக்கான மக்கள் தற்போழுது சிறந்த மெசேஜிங் ஆப்பைப் பயன்படுத்த முடியும்" என வாட்ஸ்அப் நிறுவனத்தின் துணைத் தலைவர் கிரிஸ் டேனியல்ஸ் (Chris Daniels) தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!