வெளியிடப்பட்ட நேரம்: 20:26 (12/09/2018)

கடைசி தொடர்பு:20:26 (12/09/2018)

#AppleEvent-க்கு முன்பே புதிய ஐபோன்களின் பெயர்கள் வெளியானது எப்படி?

ப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்கள் மீதான எதிர்பார்ப்பு வழக்கம்போலவே இந்த ஆண்டும் அப்படியே இருக்கிறது. ஆனால், கடந்த ஆண்டு போலவே இந்தமுறையும் #AppleEvent-க்கு முன்பாகவே ஐபோன் குறித்த தகவல்களைக் கசியவிட்டிருக்கிறது ஆப்பிள். அதனால் எந்தெந்த ஐபோன் மாடல்கள் வெளியாகவிருக்கின்றன என்ற சர்ப்ரைஸ் முடிவுக்கு வந்துவிட்டது. அப்படி ஆப்பிள் இணையதளத்தில் கசிந்த தகவல்களின்படி iPhone XS, XS Max மற்றும் XR என மொத்தம் மூன்று மாடல்களை இன்று இரவு ஆப்பிள் அறிமுகப்படுத்தவிருக்கிறது. 

ஐபோன் XS

எப்படி இந்தத் தகவல்கள் வெளியாகின?

சின்ன உதாரணம் மூலம் பார்ப்போம். ஒரு இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன எனில், அந்த முடிவுகள் முதலில் அதன் சர்வர்களில் அப்டேட் செய்யப்படும். அதனை அட்மின்கள் தவிர வேறு யாரும் பார்க்கமுடியாது. பின்னர் அவற்றைப் பொதுவெளியில் வெளியிடும்போது, அந்தத் தகவல்களை அனைவரும் பார்க்கமுடியும். ஆனால், முடிவுகள் பொதுவெளியில் வெளியாவதற்கு முன்பே பார்ப்பதற்கு இன்னொரு வழியும் இருக்கிறது. அதாவது, அந்த சர்வரில் குறிப்பிட்ட தகவல்கள் எந்த URL-ல் இருக்கிறது எனத் தெரிந்தால் அவற்றை நேரடியாகத் தேடி எடுத்துவிட முடியும். உதாரணமாக தேர்வு முடிவுகள் கால காலமாக www.examresults.com/2017/Results என்ற ஃபார்மட் கொண்ட முகவரியிலேயே வெளியாகிறது எனில், 2018-ம் ஆண்டின் முடிவுகளை www.examresults.com/2018/Results என மாற்றினாலே பார்த்துவிட முடியும். இன்று காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகிறது எனில், எப்படியும் நேற்று இரவே முடிவுகளை அப்டேட் செய்திருப்பார்கள். அதைவைத்து முடிவுகளைப் பார்த்துவிட முடியும். ஆனால், தற்போது இருக்கும் தொழில்நுட்ப வசதிகளை வைத்து இதையெல்லாம் தடுத்துவிடலாம். ஆனால், ஆப்பிள் தடுக்கவில்லை. அதனால்தான் ஐபோன் மாடல்களின் பெயர்களும், படமும் வெளியாகியிருக்கிறது.

லீக் ஆன ஐபோன் தகவல்கள்

Photo: ATH

ஆப்பிள் தன்னுடைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கு Apple Events என்ற இணையதளத்தை வைத்திருக்கிறது. அதில் கடந்த வருடம் வெளியான மொபைல்களின் பெயர்களை `Inspect' பகுதியில் சென்று பார்க்கலாம். அதில் `iphone-X' என்ற இடத்தில் ''iphone-xs' எனச் சில டெக்கீஸ் மாற்ற உடனே புதிய ஐபோனின் படம் வெளியாகிவிட்டது. இதேபோல ஆப்பிளின் Sitemap சென்று URL-களை ஆராய்ந்ததில் புதிய பெயர்களும் கிடைத்துவிட்டன. இனி இவற்றை டிம் குக் முறையாக வந்து அறிவிக்க வேண்டியது மட்டும்தான் பாக்கி! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க