புதிய ஐபோன்களின் விலை என்ன? #IphoneXS #AppleEvent

இந்தியாவில் ஐபோனின் விலை:

புதிய ஐபோன்கள் XS, XS max, XR

ஐபோன் XS: 

99,000 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. 64 GB, 256 GB, 512 GB என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும்.

ஐபோன் XS மேக்ஸ்: 

109,000 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. வரும் செப்டம்பர் 28-ம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது.

ஐபோன் XR:

64 GB, 128 GB, 256 GB என மூன்று மாடல்களில் கிடைக்கும். இதன் விலை 76,900 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இதன் ப்ரீ ஆர்டர் அக்டோபர் 19 அன்று தொடங்குகிறது. விற்பனை அக்டோபர் 26-ல் இருந்து தொடங்கும்.


ஐபோன் XR என்ற மற்றுமொரு புதிய ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்ச் டிசைன் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரே ஒரு 12 MP கேமராவைக் கொண்டது.

புதிய ஐபோன்கள்

6.1 இன்ச் LCD டிஸ்ப்ளே இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை, கருப்பு, நீலம், பவளம், மஞ்சள். என ஐந்து நிறங்களில் இது விற்பனைக்கு வரும்.

ஐபோன் XS விலை 999 டாலர்களில் இருந்து தொடங்குகிறது 

ஐபோன் XS Max  விலை 1099 டாலர்களில் இருந்தும், ஐபோன் XR விலை 749 டாலரில் இருந்தும் தொடங்குகிறது


டூயல் சிம்

நீண்ட நாளாக எதிர்பார்க்கப்பட்ட டூயல் சிம் வசதியை இந்த இரண்டு ஐபோன்களிலும் கொடுத்திருக்கிறது ஆப்பிள். eSim முறையில் இது செயல்படும்.

சீனாவில் வெளியாகும் ஐபோன்களில் மட்டும் இரண்டு சிம் ஸ்லாட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

மார்கஸ் பிரவுன்லீ ட்வீட்

ஐபோன் XS மேக்ஸ்:

இதுவரை வெளியான ஐபோன்களிலேயே மிகவும் பெரிய டிஸ்ப்ளேவைக் கொண்டது இதுதான். இதுவும் 6.5 இன்ச் சூப்பர் ரெட்டினா OLED டிஸ்ப்ளேவைக் கொண்டது.

ஆப்பிள் ஐபோன் XS Max


5.8 இன்ச் சூப்பர் ரெட்டினா OLED டிஸ்ப்ளே மிகத் துல்லியமாக காட்சிகளைத் தரும். IP68 சர்டிபிகேட்  வாட்டர் ப்ரூஃபாக இருக்கும் 

ஐபோன் XS: இதற்கு முன்னர் வெளியான ஐபோன் X-ற்கும் இந்த இரண்டு புதிய ஐபோன்களுக்கும் பெரிய அளவில் ஏதும் வித்தியசமாமில்லை. இதுவரை வெளியான ஐபோன்களிலேயே இதுதான் அழகானது என்கிறார் பில்ஷில்லர்.

Iphone XS and XS max

ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஐபோன் XS

அடுத்து ஐபோன் அறிமுகப்படுத்தவிருக்கிறது.


Apple watch series 4

ஆப்பிள் வாட்ச்:

முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்ட ஆப்பிள் வாட்ச் 4 பெரிய டிஸ்ப்ளேவைக் கொண்டது. இதன் டிசைன் மட்டுமின்றி UI-ம் முழுவதுமாக புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. S4 சிப் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது; டூயல் கோர்  64-பிட் புராஸசர் இரண்டு மடங்கு வேகத்தில் செயல்படும்.

Apple Watch series 4

"நாங்கள் எப்பொழுதும் எங்கள் வாடிக்கையாளர்களை மையமாக வைத்தே அனைத்தையும் செயல்படுத்துகிறோம், ஆகவேதான் ஐஒஸ் உலகின் முன்னணி இயங்குதளமாக மட்டுமின்றி தனித்துவமாகவும் இருக்கிறது."

ஜெப் வில்லியம்ஸ் தற்பொழுது மேடையில் தோன்றி ஆப்பிள் வாட்ச்சைப் பற்றிய அறிமுக உரையை வழங்குகிறார்.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4

முதல் கேட்ஜெட்டாக ஆப்பிள் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது. 


"ஏற்கெனவே உலக அளவில் முன்னிலையில் இருக்கும் ஆப்பிள் வாட்ச்சை, அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவிருக்கிறோம்."

"ஆப்பிள் ஸ்டோர்களை தற்பொழுது 500 மில்லியன் பேர் வரை பார்வையிடுகிறார்கள்"

ஒரு சிறிய அறிமுக வீடியோவை அடுத்து டிம் குக் தற்பொழுது மேடையில் தோன்றி நிகழ்வை 
தொடங்கி வைத்தார் 


ஆப்பிள் நிகழ்ச்சி தொடங்கியது.

Apple Event 2018

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!