வெளியிடப்பட்ட நேரம்: 11:13 (14/09/2018)

கடைசி தொடர்பு:11:13 (14/09/2018)

ஆப் தேவையில்லை! PNR ஸ்டேட்டஸை வாட்ஸ்அப்பிலும் பார்க்கலாம்!

தீபாவளிக்கு இப்போதே எல்லா ரயில் டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன. உங்கள் டிக்கெட் உறுதியாகிவிட்டதா என்று தெரிந்துகொள்ள  PNR Status பார்க்க பல வழிகள் உண்டு. இணையதளம், ஆப்ஸ் தாண்டி, வாட்ஸ்அப் மூலம் தற்போதும் PNR status பார்க்கலாம். Make My trip உடன் கைகோத்து, ரயில்வே தந்திருக்கும் இந்த வசதியைப் பெற என்ன செய்ய வேண்டும்?

PNR Status

முதலில்  Make My trip-ன் வாட்ஸ்அப் எண்  7349389104 -ஐ உங்கள் மொபைலில் பதிவுசெய்துகொள்ள வேண்டும். பிறகு, இந்த எண்ணுக்கு  PNR என டைப் பண்ணி, ஒரு இடைவெளி விட்டு  PNR எண்ணை டைப் பண்ணி அனுப்ப வேண்டும். (உதாரணம் -  PNR 1234567891)

இப்போது, உங்கள்  PNR எந்த நிலையிலிருக்கிறது என்பதை வாட்ஸ்அப் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இது போலவே,  Train status-ம் அறிந்துகொள்ளலாம். இதற்கு, வெறுமனே அந்த ரயில் எண்ணை மட்டும் வாட்ஸ்அப் செய்தால் போதும்.

PNR status

 Mi மொபைல் யூஸர்களுக்கு வாட்ஸ்அப் கூடத் தேவையில்லை. டிக்கெட் தொடர்பாக வந்திருக்கும் குறுஞ்செய்தியைத் திறந்துபாருங்கள். அதற்குக் கீழே  Check PNR என்றொரு பட்டன் இருக்கும். அதை க்ளிக் செய்தால், நேராக ஓர் இணையதளம் திறந்து அங்கே உங்கள்  PNR status வந்துவிடும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க