வாட்ஸ்அப்பில் Dark Mode... வருகிறது புது அப்டேட்! | Whatsapp new update will add swipe to reply feature

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (17/09/2018)

கடைசி தொடர்பு:15:15 (17/09/2018)

வாட்ஸ்அப்பில் Dark Mode... வருகிறது புது அப்டேட்!

புதிதாக இரண்டு வசதிகள் வாட்ஸ்அப்புக்கு வரவிருக்கின்றன. ஒன்று Dark Mode, மற்றொன்று Swipe to Reply. வாட்ஸ்அப் வெர்ஷன் 2.18.283-ல் இருந்து இந்த வசதிகள் கிடைக்கும். தற்போது பீட்டா வெர்ஷன் வெளியாகியிருந்தாலும், அதில் இந்த இரண்டு வசதிகளும் சேர்க்கப்படவில்லை. இன்னும் சோதனை நிலையிலேயே இருப்பதுதான் அதற்கு காரணம்.

Dark Mode வசதியானது ஏற்கெனவே பல ஆப்களில் வழக்கத்தில் இருக்கும் ஒன்றுதான். தற்போது வாட்ஸ்அப்புக்கும் வரவிருக்கிறது. இதன்மூலம் வாட்ஸ்அப்பின் வழக்கமான 'வொயிட் தீமில்' இருந்து 'நைட் தீமுக்கு' மாறிக்கொள்ள முடியும். இந்த வசதி iOS, ஆண்ட்ராய்டு இரண்டுக்கும் வரவுள்ளது. Swipe to reply வசதியானது ஏற்கெனவே iOS வெர்ஷனில் இருப்பதுதான். தற்போது ஆண்ட்ராய்டுக்கு அப்டேட் ஆகவுள்ளது. 

 

 

via GIPHY

இதன்மூலம், வாட்ஸ்அப் குரூப்களில் அனுப்பப்படும் மெசேஜ்களுக்கு மிக எளிதாக ரிப்ளை செய்யலாம். தற்போது குரூப்பில் ஒருவரின் மெசேஜுக்கு ரிப்ளை செய்யவேண்டுமென்றால், அந்த மெசேஜை சில நொடிகள் Press செய்து, பின்னர் ரிப்ளை பட்டனை தேர்வு செய்தால் மட்டுமே, ரிப்ளை மெசேஜ் அனுப்பமுடியும். ஆனால், இந்தப் புதிய வசதி மூலம், பிறரின் மெசேஜை வலதுபுறம் ஸ்வைப் செய்தாலே, ரிப்ளை வசதி வந்துவிடும். இதேபோல புதிய அப்டேட்டில், வாட்ஸ்அப் குரூப்களில் 10 பேருக்கு மேல் இருக்கும்பட்சத்தில், அவர்களை மொத்தமாகக் காட்டாமல், More ஆப்ஷன் மூலம் பார்த்துக்கொள்ளலாம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close