வெளியிடப்பட்ட நேரம்: 15:24 (17/09/2018)

கடைசி தொடர்பு:15:24 (17/09/2018)

"மொபைல் மட்டுமில்ல டி.வி-யும் ரெடி" - ஒன் ப்ளஸ் சர்ப்ரைஸ் அறிவிப்பு!

மக்கள் அனைவரும் ஒன் ப்ளஸ் 6டி அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கும்போது, திடீரென ஸ்மார்ட் டி.வி ஒன்று வெளியாகும் என்ற தகவலை வெளியிட்டு, மக்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது ஒன் ப்ளஸ் நிறுவனம். 

ஒன்ப்ளஸ்

சீன மொபைல் நிறுவனமான இது, தனது பலமான சந்தையான மொபைல் போன் சந்தையை விட்டு முதல்முறையாக வெளியே கால் பதிக்க உள்ளது. இதை அந்நிறுவனத்தின் தலைவர் பீட் லாவ் ஒன் ப்ளஸ் வாடிக்கையாளருக்கான ஃபோரமில் தெரிவித்தார். எப்படி சமீபத்திய தொழில்நுட்ப வளர்ச்சி, வீட்டில் உள்ள சாதனங்கள் வரை மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கின்றன என்பதைப் பற்றி பேசிய அவர், தாங்களும் அந்த மாற்றத்தில் பங்கெடுக்க விரும்புவதாகத் தெரிவித்தார். 

அவரின் பதிவைக் காண க்ளிக் செய்க

இதை, 'ஒன் ப்ளஸ் டி.வி' என்று அழைக்கும் அவர், அதைப் பற்றி வேறெதுவும் தெரிவிக்கவில்லை. இதற்கான முன்னேற்றங்கள் ஆரம்ப கட்டத்தில்தான் இருக்குமெனத் தெரிகிறது. ஸ்மார்ட்போன் நிறுவனம் ஒன்று இப்படி டி.வி சந்தைக்கு வருவது இது முதல் தடவை அல்ல. ஏற்கெனவே, மைக்ரோமாக்ஸ், ஷியோமி எனச் சில நிறுவனங்கள் இதைச் செய்துள்ளன. இதே போன்று ஒன் பிளஸ் நிறுவனம், ஸ்மார்ட் வாட்ச் தயாரிக்கப்போவதாக அறிவித்து, ஸ்மார்ட் போனில் கூடுதல் கவனம் வேண்டுமெனக் கடைசி நேரத்தில் அதை நிறுத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க