வெளியிடப்பட்ட நேரம்: 22:21 (18/09/2018)

கடைசி தொடர்பு:22:21 (18/09/2018)

ஒரே லிங்க்கில் கிராஷாகும் ஐபோன்... ஆப்பிளை சோதிக்கும் புதிய Bug

ஐபோன்

ஒரு சிறிய Bug ஒன்று ஐபோனை கிராஷ் செய்வதை மென்பொருள் பொறியாளர் ஒருவர் கண்டறிந்துள்ளார். இந்த லிங்கை யாராவது ஒருவர் வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது இமெயில் போன்றவற்றிலோ அனுப்பி அதைக் கிளிக் செய்தால் ஐபோன் கிராஷ் ஆகிறது. அந்த இணையதளத்தின் சோர்ஸ்கோடில் CSS மற்றும் HTML ஆகியவற்றின் சில வரிகள் சேர்க்கப்பட்டதுதான் இந்தப் பிரச்னைக்கு காரணம் என்று இதைக் கண்டறிந்தவர் தெரிவித்திருக்கிறார். அந்த லிங்கில் இணைக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட இணையதளப் பக்கத்தைப் பார்க்க முயலும்போதுதான் சஃபாரி ப்ரவுசர் அப்படியே நின்றுவிடுகிறது, அதன் பின்னர், போன் ரீஸ்டார்ட் ஆகிறது. பெரும்பாலான ஐ.ஓ.எஸ் இயங்குதளத்தைப் பயன்படுத்தும் சாதனங்கள் அனைத்திலும் இந்தக் கிராஷ் பிரச்னை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.