`அந்த 32 பேர் கூட நாங்க ஏன்யா பேசப்போறோம்?!' - #iOS12 அலப்பறைகள் | Apple iOS 12 new features

வெளியிடப்பட்ட நேரம்: 08:51 (19/09/2018)

கடைசி தொடர்பு:12:25 (19/09/2018)

`அந்த 32 பேர் கூட நாங்க ஏன்யா பேசப்போறோம்?!' - #iOS12 அலப்பறைகள்

`அந்த 32 பேர் கூட நாங்க ஏன்யா பேசப்போறோம்?!' - #iOS12 அலப்பறைகள்

கடந்த வாரம் புதிய ஐபோன்கள் அறிமுகம் செய்யப்படும்போது iOS 12 இயங்குதளத்தையும் சேர்த்தே அறிமுகப்படுத்தியிருந்தது ஆப்பிள். கடந்த 17-ம் தேதி முதல் ஆப்பிள் சாதனங்களுக்கு iOS 12-ஐ டவுன்லோடு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோனில் பெரிதாக மாற்றம் செய்யப்படவில்லை, முந்தைய போனில் இருந்த வசதிகள் மட்டுமே அப்டேட் செய்யப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட அதையே iOS விஷயத்திலும் பின்பற்றியிருக்கிறது ஆப்பிள். iOS 12 -ல் ஒரு சில வசதிகளை மட்டும் புதிதாகக் கொடுத்திருக்கிறது. பெரும்பாலானவை முன்னர் இருந்தவற்றிலிருந்து கொஞ்சம் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. iOS 12 -ல் இருக்கக் கூடிய சிறந்த வசதிகள் இவை.

Grouped notifications:

Grouped notifications-iOS12

ஆண்ட்ராய்டு அன்பர்களுக்கு இது ஆதிகாலத்து வசதி. ஆனால் ஐபோன் ரசிகர்கள் நீண்ட காலமாகவே எதிர்பார்த்து வந்த ஒரு விஷயம் இது. iOS 12 அப்டேட் செய்துவிட்டால் ஒரு ஆப்பிற்கு வரும் அனைத்து நோட்டிஃபிகேஷன்களையும் ஒன்றாகச் சேர்த்து பார்க்க முடியும். இதற்கு முன்னால் நோட்டிஃபிகேஷன்களை ஒவ்வொன்றாக கிளியர் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் இனிமேல் ஒரே கிளிக்கில் அனைத்து நோட்டிஃபிகேஷன்களையும் கிளியர் செய்யலாம்.

Measure app

Measure app

iOS 12-ல் இருக்கக்கூடிய சற்றுப் புதுமையான அதே சமயம் வித்தியாசமான ஒரு வசதி. இதை எதற்காக ஆப்பிள் கொடுத்திருக்கிறது என்பது ஐபோன் யூஸர்களுக்கே சந்தேகம் வரக்கூடும். ஆக்மென்ட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தின் மூலமாக ஐபோனில் பல புதுமையான வசதிகளைக் கொடுத்து வருகிறது ஆப்பிள். இந்த புதிய Measure app மூலமாக ஐபோன் அல்லது ஐபேடின் கேமராவைப் பயன்படுத்தி எதிரில் இருக்கும் பொருளின் அளவுகளைக் கண்டறிய முடியும். எடுத்துக்காட்டாக ஒரு கீ போர்டை கேமராவுக்கு முன்னால் காட்டினால் அதன் நீளம், அகலத்தை டிஸ்ப்ளேவில் காட்டும். ஆப்பிள் தானே அப்போ துல்லியமாகத்தான் இருக்கும் என்று நினைத்தால் அது மிகவும் தவறு. ஓரளவுக்குக் குத்துமதிப்பாக இதன் மூலமாக அளவுகளைக் கண்டறிய முடியும். இனிமேல் ஐபோன் ஒன்று மட்டும் போதும், அதை வைத்து உலகத்தையே அளந்து விடுவார்கள் ஐபோன் யூஸர்கள்.

Memojis

Memojis-ஐஓஎஸ்

ஏற்கெனவே இருக்கும் அனிமோஜியின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் இது. கிட்டத்தட்ட இரண்டும் ஒன்றாகவே தோன்றுகிறது என்றே கூறலாம். நாக்கு மற்றும் கண் சிமிட்டுவதைக் கண்டறிந்து அதற்கேற்றவாறு மீமோஜிக்களை இது உருவாக்கும். இது தவிர வேறு சில புதியஅனிமோஜிக்களையும் iOS 12 -ல் பெற முடியும். 

Group FaceTime

iOS

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற WWDC 2018 நிகழ்விலேயே இந்த வசதி அறிவிக்கப்பட்டு விட்டது. சில மாதங்கள் கழித்து அதை iOS 12 -ல் கொடுத்திருக்கிறது ஆப்பிள். இந்தப் புதிய அப்டேட்டின் மூலமாக அதிகபட்சம் 32 பேருடன் வீடியோ அல்லது ஆடியோ சாட் செய்ய முடியும். எல்லாம் ஓகேதான். ஆனால் ஒருவர் எதற்காக 32 நபர்களுடன் ஒரே நேரத்தில் பேசப் போகிறார் என்பது மட்டும் புரியவேயில்லை. 

Screen Time

Screen Time

இந்த வசதியும் ஆண்ட்ராய்டில் வந்து பல காலம் ஆகி விட்டது. சமீப காலமாக ஆண்ட்ராய்டில் இருக்கும் பல விஷயங்களை உருவி iOS-ல் கொடுக்கத்தொடங்கியிருக்கிறது. அந்த லிஸ்டில் சமீபமாக இணைந்திருப்பது இந்த Screen Time தான். ஒருவர் தனது மொபைலில் எவ்வளவு நேரத்தைச் செலவழிக்கிறார் என்பதை இதன் மூலமாகக் கண்காணிக்க முடியும். கண்காணிப்பதோடு மட்டுமன்றி சில ஆப்களை கட்டுப்படுத்தவும் முடியும். எனவே ஸ்மார்ட்போனில் அதிக நேரத்தைச் செலவிடுபவர்களுக்கு அந்த நேரத்தைக் குறைப்பதற்கு இது உபயோகமான இருக்கும். 

இவை தவிர iOS 12 -ல் செக்யூரிட்டி, சிரி, கேமரா, பெர்ஃபாமன்ஸ் போன்ற இதர விஷயங்களிலும் கவனம் செலுத்தியிருக்கிறது ஆப்பிள்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close