வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (20/09/2018)

கடைசி தொடர்பு:15:47 (20/09/2018)

இந்தப் போன்களில் எல்லாம் கொஞ்ச நாளில் வாட்ஸ்அப் கிடையாது!

பிரபல செயலியான வாட்ஸ்அப் சில பழைய போன்களுக்கு தங்கள் சேவையை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் கைவசம் இருக்கும் வாட்ஸ்அப் ஐஓஎஸ் 7ல் இயங்கும் ஐபோன்களிலும் அதன் கீழ் உள்ள ஐஓஎஸ் இயங்கும்   வெர்ஷன்களில்  ஐபோன்களிலும் 2020-க்குப் பிறகு தங்கள் செயலி செயல்படாது என அறிவித்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டை பொறுத்தவரையில், ஜின்ஜர்பிரட்(Gingerbread) வெர்ஷன் வரை இருக்கும் ஆண்ட்ராய்டு வெர்ஷன்களில் இயங்கிக்கொண்டிருக்கும் போன்களிலும் 2020க்குப் பிறகு வாட்ஸ்அப் செயல்படாது. ஆனால், இப்போது வரை ஜின்ஜர்பிரட் போன் வைத்திருந்தால் இது மட்டுமே ஒரே பிரச்னையாக இருக்காது. 

வாட்ஸ்அப்

என்ன தான் 2020 வரை இந்த மொபைல்களில் வாட்ஸ்அப் தாக்குப்பிடிக்கும் எனக் கூறப்பட்டாலும் செயலியைத் தயாரிப்பவர்கள் இந்த வெர்ஷன் மொபைல்களுக்கு இனி எந்த ஒரு அப்டேட்களும் தராததால் சில வசதிகள் இப்போதே செயல்படாது எனக் கூறப்படுகிறது. மேலும் பழைய நோக்கியா எஸ்40யில் இயங்கும் மொபைல்களிலும் இந்த வருட இறுதியில் இருந்து வாட்ஸ்அப் செயல்படாது.

வாட்ஸ்அப் தங்கள் உதவி தளத்தில் பதிவிட்டதுபடி பார்த்தால்,

சப்போர்ட் நிறுத்தப்படும் போன்கள் 

நோக்கியா எஸ்40 - டிசம்பர் 31, 2018 வரை சப்போர்ட் இருக்கும்
ஆண்ட்ராய்டு 2.3.7 வரை இருக்கும் போன்கள் - பிப்ரவரி 2020 வரை சப்போர்ட் இருக்கும் 
ஐஓஎஸ் 7 வரை இருக்கும் ஐபோன்கள் - பிப்ரவரி 2020 வரை சப்போர்ட் இருக்கும்

சப்போர்ட் தொடரும் போன்கள் 

ஆண்ட்ராய்டு 4.0 ஜெல்லி பீன் மற்றும் அதற்கு மேலிருக்கும் வெர்ஷன்கள் 
ஐஓஎஸ் 8 மற்றும் அதற்கு மேலிருக்கும் வெர்ஷன்கள் 
விண்டோஸ் 8.1 மற்றும் அதற்கு மேலிருக்கும் வெர்ஷன்கள் 
KaiOSல் இயங்கும் ஜியோ போன்கள்  

ஆனாலும் இப்போது வரை நோக்கியா போனுக்கு சப்போர்ட் அளித்து வந்து, சேவை நிறுத்தத்தையும் முன்கூட்டியே அறிவிக்கும் வாட்ஸ்அப்பின் கடமை உணர்ச்சியைப் பாராட்டி தான் ஆக வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க