வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (20/09/2018)

கடைசி தொடர்பு:18:45 (20/09/2018)

'200 ரூபாய்க்கு 100 ஜிபி?' - இந்தியாவுக்கு வரும் கூகுள் ஒன்

இந்த வருடத்தின் தொடக்கத்தில், தங்களது கிளவுட் ஸ்டோரேஜ் சேவைகளை மாற்றியமைக்கப்போவதாக அறிவித்திருந்தது கூகுள். மேம்படுத்தப்பட்ட இந்த சேவை, 'கூகுள் ஓன்' என்று அழைக்கப்பட்டது. இதில் கூடுதல் ஸ்டோரேஜ், மற்றவர்களுடன் ஸ்டோரேஜை பகிரும் வசதி, லைவ் சப்போர்ட் எனப் பல விஷயங்களை மேம்படுத்தியிருந்தது. இதைக் கடந்த மாதம் அமெரிக்காவில் செயல்படுத்திய கூகுள், விரைவில் இந்தியாவுக்கும் கொண்டுவர உள்ளது.

கூகுள் ஓன்

இதைத் தங்களது அதிகாரபூர்வ வலைப்பதிவில் அறிவித்துள்ள கூகுள், தற்போது கூகுள் டிரைவ் சேவையைப் பணம் கட்டிப் பெரும் வாடிக்கையாளர்கள் தானாக கூகுள்  ஒன் சேவைக்கு அப்டேட் செய்யப்படுவர் எனவும் அறிவித்தது. மற்றவர்கள், சேவை தொடங்கியதும் தங்களது சந்தாக்களைப் பெற்றுக்கொள்ள முடியும். 

கூகுள்  ஒன் வந்ததும் உங்களுக்கு அலெர்ட் வர விரும்பினால் க்ளிக் செய்யவும்

இன்னும் விலையைப் பற்றி எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், அமெரிக்கா விலையை வைத்துப் பார்த்தால், மாதம் 200 ரூபாயில் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கலாம். 200 ரூபாய்க்கு மாதம் 200 ஜிபி கிடைக்கும் என நம்பலாம். தற்போது இருக்கும் டிரைவ் சேவைகள், 100 ஜிபி ஸ்டோரேஜூக்கு 130 ரூபாய் வாங்கி வருகின்றன. இந்தச்  சேவையின் சிறப்பாகப் பார்க்கப்படுவதே, இந்த ப்ளானில் 5 பேர் வரை உங்களால் இணைத்துக்கொள்ள முடியும். இப்படிப் பகிர்வதால், இடம் வீணாகாமலும் இருக்கும். விலையும் கணிசமாகக் குறையும். இதன்மூலம், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு தனிப்பட்ட கிளவுட் ஸ்டோரேஜ் ஒரே பில்லில் கிடைக்கும். ஒருவரின் தரவை இன்னொருவர் பார்க்க முடியாது. மேலும், பிசினஸ் கணக்குகளுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுவந்த லைவ் சப்போர்ட், இனி இதன் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க