வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (21/09/2018)

கடைசி தொடர்பு:15:45 (21/09/2018)

உலக சிங்கிள்களே... வந்துவிட்டது ஃபேஸ்புக்கின் 'டேட்டிங்' ஆப்! #Facebook

இந்த வருடம் மே மாதம் நடந்த f8 என்னும் வருடாந்திர ஃபேஸ்புக் மாநாட்டில் தங்களது டேட்டிங் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஃபேஸ்புக்கில் இருக்கும் ஒருவரைப் பற்றிய தகவலை எடுத்து, அதன்மூலம் சரியான துணையை சில வழிமுறைகளைக் கொண்டு கண்டுபிடித்துத் தருமாம் இந்தச் செயலி. டேட்டிங் செயலியான இதற்குப் பெயரும் 'டேட்டிங்' தான். சோதனை செய்ய கொலம்பியா நாட்டில் மட்டும் இதை ஃபேஸ்புக்கில் தற்போது வெளியிட்டிருக்கிறது.

டேட்டிங்

இந்த விஷயத்தில், மற்ற டேட்டிங் செயலிகளில் இல்லாத வசதி ஃபேஸ்புக்கிடம் இருக்கிறது. என்னதான் உங்களைப் பற்றிய கேள்விகளைக் கேட்டு உங்களின் குணநலன்களை மற்ற செயலிகள் அறிந்தாலும், ஃபேஸ்புக் தளத்தில் உள்ள உங்கள் நடவடிக்கைகளை வைத்து கணிப்பதைப் போல துல்லியமாக எந்த டேட்டிங் செயலியும் செய்துவிடாது. மற்ற செயலிகள் கேட்கும் கேள்விகளில்கூட வேண்டுமென்றே வேறு ஒரு பதிலை அளிக்க முடியும். 

"இணையத்தில் ரிலேஷன்ஷிப் வளர்க்கச் சிறந்த இடமாக ஃபேஸ்புக் மாறவேண்டும் என்பதே இந்தச் செயலி தயாரிப்பின் முக்கிய குறிக்கோள்"என்கிறார், இதன் தயாரிப்பு மேலாளர் நேத்தன் ஷார்ப். மேலும், இவர்கள் செயலியை டிண்டரில் இருக்கும் ஸ்வைப் வசதி போல இல்லாமல் நிரந்தர உறவுகளை இணைக்கவே தயாரித்துள்ளனராம்.

மொபைல் ஃபேஸ்புக் செயலி இருந்தால்தான் இதைப் பயன்படுத்த முடியும். இது, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமானது. பயன்படுத்த விரும்புபவர்கள் தனியாக இதில் பதிவுசெய்ய வேண்டியதிருக்கும். பேஸ்புக்கில் இருக்கும் குறிப்பிட்ட சில தகவல்கள் மட்டுமே தற்போதைக்கு பயன்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

தற்போது, கொலம்பியாவில் இது வெளிவந்துவிட்டாலும் ஓரளவு மக்கள் சேர்ந்தபின்தான் மேட்சிங் வேலைகளை ஆரம்பிக்குமாம் 'டேட்டிங்'. இது விரைவில் இந்தியாவுக்கும் வர உள்ளது. இந்த ஐடியா நம்மூருக்கு செட் ஆகுமா... ஆகாதா? 

நீங்க எப்படி பீல் பண்றீங்க