வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (22/09/2018)

கடைசி தொடர்பு:17:15 (22/09/2018)

வந்துவிட்டன GoPro ஹீரோ 7 சீரிஸ் ஆக் ஷன் கேமராக்கள் 

பிரபல ஆக் ஷன் கேமரா நிறுவனமான GoPro தங்களது ஹீரோ 7 சீரிஸ் கேமராக்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய மாடல்கள் சென்ற ஹீரோ 6 சீரிஸ் கேமராக்களை விடக் கூடுதல் செயல்பாட்டுத் திறன்கள் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது. மூன்று வகையான கேமராக்கள் இந்த 7 சீரிஸில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஹீரோ 7 ஒய்ட் தான் இருப்பதிலேயே விலை குறைந்த மாடல். இது 19,000 ரூபாய்க்கு விற்பனைக்கு வரும். ஹீரோ 7 சில்வர் 28,000 ரூபாயிலும், ஹீரோ 7 ப்ளக் 37,000 ரூபாயிலும் விற்கப்படும்.

ஹீரோ 7

வாட்டர்ப்ரூஃப் கேமராக்களான இவை ஹீரோ 6 மாடல்களில் இருந்த அதே அளவு LCD டச் ஸ்கிரீன் கொண்டுள்ளன. இதில் புதிய வசதிகளாக வாய்ஸ் கண்ட்ரோல் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், எடுக்கும் காட்சிகள் இதே நிறுவனத்தின் கிளவுட் ஸ்டோரேஜில் தானாக பேக் அப் ஆகிவிடுமாம்.

இதில் ஹீரோ 7 ப்ளக் மாடல்தான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'ஹைப்பர்ஸ்மூத் ஸ்டேபிலைசேஷன்'(HyperSmooth Stabilization) என்ற வசதியை அறிமுகப்படுத்துகிறது இந்த கேமரா. இதன் மூலம் எந்த ஒரு அசைவும் கேமராவில் எடுக்கப்படும் காட்சிகளைப் பாதிக்காது, நிலையான ஒரு வீடியோ நமக்குக் கிடைக்கும். இது கிம்பில் (Gimbal) என்கிற கூடுதல் ஸ்டேபிலைசேஷன் சாதனத்துடன் படம்பிடித்த அளவுக்கு நிலையாக இருக்கும் என்கிறது GoPro நிறுவனம். மேலும், டைம்-லேப்ஸ் வீடியோக்களையும் இதில் எடுக்க முடியும். இதை 'Time Wrap' என்று இவர்கள் அழைக்கின்றனர். HDR போன்று எடுக்கும் புகைப்படங்களை மேம்படுத்தும் `சூப்பர் போட்டோ' என்ற ஒரு சிறப்பு வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

 

குறைந்த விலை மாடல்கள் ஆன ஹீரோ 7 சில்வர் மற்றும் ஹீரோ 7 ஒயிட் 10 MP சென்சாருடன் தான் வருகின்றன. GP1  சிப் இல்லாததால் ஹீரோ 7 ப்ளக் போல அல்லாமல் ஹீரோ 7 சில்வர் வெறும் 30fpsயில் தான் 4K வீடியோவை ரெகார்ட் செய்யும். ஹீரோ 7 ஒயிட் 1440pயில் 60fps  வரை தான் ரெகார்ட் செய்யும். 33 அடி வரை தண்ணீரில் தாக்குப்பிடிக்கும் இந்த கேமராக்கள். 

 

 

எல்லாவற்றையும் தாண்டி முதல்முறையாகச் சமூக வலைதளங்களில் லைவ்வாக வீடியோக்களைப் பகிரும் வசதியை இந்த ஹீரோ 7 சீரிஸ் கேமராக்களுக்கு கொடுத்துள்ளது GoPro. இதற்குக் கூடவே ஒரு மொபைலும் வேண்டும் என்பதையும் நோட் செய்யவும்.

ஸ்போர்ட்ஸ், ட்ராவல் எனப் பல ஆக்ஷன் வீடியோ எடுக்க நினைப்பவர்களிடம் இந்த குட்டி GoPro ஹீரோ 7 சீரிஸ் கேமராக்கள் நல்ல வரவேற்பை பெரும் என நம்பலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க