₹10,000 பட்ஜெட்... என்ன மொபைல் வாங்கலாம்? #BuyingGuide | best smartphones under 10000 rupees

வெளியிடப்பட்ட நேரம்: 04:46 (23/09/2018)

கடைசி தொடர்பு:04:46 (23/09/2018)

₹10,000 பட்ஜெட்... என்ன மொபைல் வாங்கலாம்? #BuyingGuide

₹10,000 பட்ஜெட்... என்ன மொபைல் வாங்கலாம்? #BuyingGuide

ரு ஸ்மார்ட்போனை வாங்க விரும்புகிறவர்கள் முதலில் பரிசீலனை செய்வது பட்ஜெட் செக்மென்ட்டில் இருக்கும் ஸ்மார்ட்போன்களைத்தான். அது மட்டுமின்றி புதிதாக ஸ்மார்ட்போனை பயன்படுத்த ஆரம்பிப்பவர்கள் பெரும்பாலும் குறைவான விலையிலேயே வாங்க விரும்புவார்கள். எனவேதான் அனைத்து மொபைல் நிறுவனங்களும் இந்த செக்மென்டில் கூடுதல் கவனம் செலுத்துகின்றன. இந்த செக்மென்டில் பத்தாயிரம் ரூபாய்க்குக் கீழே இருக்கும் சில சிறந்த ஸ்மார்ட்போன்கள் இவை.


Redmi 6 A 

பட்ஜெட் விலையில் மொபைல் வாங்க நினைப்பவர்களை ஈர்க்கும் வகையிலான ஸ்மார்ட்போன்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது ஷியோமி. அந்த வகையில் ரெட்மி 6A சிறந்த என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனாக இருக்கிறது. இதன் முந்தைய வெர்ஷனான ரெட்மி 5A மார்க்கெட்டில் செம ஹிட். தற்பொழுது அதே விலையில் ரெட்மி 6A அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. 

Redmi 6A 

டிஸ்ப்ளே           - 5.45 இன்ச்
கேமரா                - 13 MP பின்புற கேமரா, 5 MP முன்புற கேமரா 
புராஸசர்            - குவாட்கோர் Helio A22 
இயங்குதளம்    - ஓரியோ 
பேட்டரி              - 3000 mAh

2 GB + 16GB வேரியன்ட் - 5,999 ரூபாய்,

2 GB + 32GB வேரியன்ட் - 6,999 ரூபாய். 

Redmi 6

பட்ஜெட் மொபைலாக இருந்தாலும் இதில் ஃபிங்கர்பிரின்ட் மற்றும் டூயல் கேமரா வசதியைத் தருகிறது ஷியோமி. ரெட்மி 6A-வை விடச் சற்று கூடுதலான வசதிகள் இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தேர்வாக இருக்கும். 

Redmi 6

டிஸ்ப்ளே           - 5.45 இன்ச்
கேமரா                - 12 MP + 5 MP டூயல் கேமரா, 5 MP முன்புற கேமரா 
புராஸசர்            - ஆக்டாகோர் Mediatek P22 
இயங்குதளம்    - ஓரியோ 
பேட்டரி              - 3000 mAh


3 GB + 32 GB வேரியன்ட் - 7,999 ரூபாய்,

3 GB + 64 GB வேரியன்ட் - 9,499 ரூபாய்

Honor 7A 

கொடுக்கும் விலைக்கு வசதிகளை அதிகம் தருவது என்று பார்த்தால் ஷியோமிதான் பெஸ்ட். அதே நேரத்தில் பட்ஜெட் மொபைலாக இருந்தாலும் ப்ரீமியம் லுக்கை தருவது வாவே நிறுவனத்தின் ஹானர் ஸ்மார்ட்போன்கள்தான். பத்தாயிரம் ரூபாய்க்கு கீழே ஹானர் 7A சிறந்த லுக்கைத் தரும் ஸ்மார்ட்போன்.

Honor 7A மொபைல்

 

டிஸ்ப்ளே           - 5.7 இன்ச் 
கேமரா                - 13MP+ 2 MP டூயல் கேமரா, 8 MP முன்புற கேமரா 
புராஸசர்            - ஸ்னாப்டிராகன் 430 
இயங்குதளம்    - ஓரியோ 
பேட்டரி              - 3000 mAh 
விலை                - ரூ. 8,999 

Samsung Galaxy J4

சாம்சங் தனது பட்ஜெட் மொபைல்களில் கூட AMOLED வகை டிஸ்ப்ளேவைப் பயன்படுத்துகிறது. இந்த வகை டிஸ்ப்ளேவில் IPS டிஸ்ப்ளேவை விடச் சிறப்பான வகையில் காட்சிகளைப் பார்க்க முடியும். டிஸ்ப்ளேதான் எனக்கு முக்கியமாகத் தேவைப்படும் என்பவர்களுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன் இது.

Samsung Galaxy J4

 

டிஸ்ப்ளே           - 5.5 இன்ச் 
கேமரா                - 13 MP கேமரா, 5 MP முன்புற கேமரா 
புராஸசர்            - குவாட்கோர் Exynos 7570
இயங்குதளம்    - ஓரியோ 
பேட்டரி              - 3000 mAh

2 GB + 16 GB வேரியன்ட் விலை - ரூ.8,990

Realme 2

பட்ஜெட் செக்மென்டில் ஷியோமிக்கு இருக்கும் போட்டியாளர் ரியல்மீதான். யாரைப் பார்த்தாலும் ரெட்மி மொபைலைத்தான் கையில் வைத்திருக்கிறார்கள். வேறு என்ன மொபைல் வாங்கலாம் என யோசிப்பவர்களுக்கு இருக்கும் மாற்று தேர்வு ரியல்மீ 2 தான். இந்த விலையில் நாட்ச் கொடுத்திருப்பது ரியல்மீ 2-வின் பிளஸ்.

Realme 2

 

டிஸ்ப்ளே           - 6.2 இன்ச் 
கேமரா                - 12 MP + 5 MP டூயல் கேமரா, 5 MP முன்புற கேமரா 
புராஸசர்            - ஆக்டாகோர் Snapdragon 450
இயங்குதளம்    - ஓரியோ 
பேட்டரி              - 4230 mAh 
 

3 GB + 32 GB வேரியன்ட் விலை - ரூ.8,999

4 GB + 64 GB வேரியன்ட் விலை - ரூ.10,999

Redmi Note 5

ரெட்மி நோட் 5 க்கு பெரிதாக அறிமுகம் தேவையிருக்காது. பேட்டரி பெர்ஃபாமன்சில் ரெட்மியின் நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அடித்துக்கொள்ள வேறு மொபைல்கள் கிடையாது. அதிக நேரம் பேட்டரி சார்ஜ் நிற்க வேண்டும் விரும்புபவர்களுக்கு ஏற்ற மொபைல் இது.

Redmi Note 5 ஸ்மார்ட்போன்


டிஸ்ப்ளே           - 5.99 இன்ச் 
கேமரா                - 12 MP கேமரா, 5 MP முன்புற கேமரா 
புராஸசர்            - ஆக்டாகோர் Snapdragon 625 
இயங்குதளம்    - நௌகட் 
பேட்டரி              - 4000 mA 

விலை               

3 GB + 32 GB வேரியன்ட் - ரூ.9,999

4 GB + 64 GB வேரியன்ட் - ரூ.11,999


 


டிரெண்டிங் @ விகடன்