மோடி அரசின் A- Z முறைகேடுகளைச் சொல்லும் காங்கிரஸின் புதிய இணையதளம்! | Congress launches a new site to compile all allegations against Modi government

வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (25/09/2018)

கடைசி தொடர்பு:16:45 (25/09/2018)

மோடி அரசின் A- Z முறைகேடுகளைச் சொல்லும் காங்கிரஸின் புதிய இணையதளம்!

ஃபேல் விவகாரத்தில் முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே வாக்குமூலத்தால் பா.ஜ.கவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பிரெஞ்சு ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர் ``இந்திய அரசின் வலியுறுத்தலின் பேரில்தான் ரஃபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸுக்கு வழங்கினோம்" எனக்கூற, அது பெரும் சர்ச்சையானது. 

மோடி அரசின் மீதான குற்றச்சாட்டை சொல்லும் புதிய இணையதளம்

இதையடுத்து, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ரிலையன்ஸ் - டசால்ட் ஒப்பந்தம் குறித்து மோடி அரசை விமர்சித்து வருகின்றன. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுக் காலத்தில் மோடி அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், முறைகேடுகள் அனைத்தையும் தொகுத்து புதிய இணையதளம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறது காங்கிரஸ்.

புதிய இணையதளம் 

இந்தத் தளத்தில் இதுவரை இந்த அரசின் மீது எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் A,B,C,D என Z வரை முறையாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதுதொடர்பான வீடியோக்கள், செய்தி இணைப்புகள் போன்றவையும் அதிலேயே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த http://www.corruptmodi.com/ இணையதளம் குறித்து காங்கிரஸ் இன்று மதியம் ட்வீட் செய்யவும், உடனே சமூகவலைதளங்களில் வைரலாகத்தொடங்கிவிட்டது. #CorruptModi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரிலும் ட்ரெண்டாகி வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close