`இந்தியாவில் மோசமான மொபைல் ஸ்ட்ரீமிங்!’ - ஓபன்சிக்னல் ரிப்போர்ட் | India crawls at the bottom of worlds best mobile streaming experiences

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (26/09/2018)

கடைசி தொடர்பு:18:40 (26/09/2018)

`இந்தியாவில் மோசமான மொபைல் ஸ்ட்ரீமிங்!’ - ஓபன்சிக்னல் ரிப்போர்ட்

கடந்த சில வருடங்களில் தொலைத்தொடர்பு வளர்ச்சிகளால் இந்தியா முழுவதும் மொபைலில் வீடியோவை ஸ்ட்ரீம் செய்யும் மக்களின் எண்ணிக்கை நம்பமுடியாத அளவு உயர்ந்துள்ளது. இருப்பினும் இன்னும் ஸ்ட்ரீமிங் தரத்தில் இந்தியா பின்தங்கியே இருப்பதாகச் சமீபத்தில் வெளியாகியுள்ள ஓபன்சிக்னல் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

ஸ்ட்ரீமிங்

வீடியோ ஓடிக்கொண்டிருக்கும்போதே அவ்வப்போது நின்றுவிடுவது, மிகக் குறைந்த குவாலிட்டி வீடியோ கூட லோடாக நீண்ட நேரம் எடுப்பதென உலகநாடுகளில் 'Poor Territory" என்ற மோசமான இடங்களில் ஒன்றாக இந்தியாவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரிப்போர்ட்டைக் காண கிளிக் செய்யவும் 

``இந்த ஆய்வில் வித்தியாசமான குவாலிட்டிகளில் வீடியோக்களை வெவ்வேறு மொபைல் நெட்ஒர்க்களில் ஸ்ட்ரீம் செய்து மூன்று அளவுகோல்களின் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. வீடியோ தொடங்க எடுத்துக்கொள்ளும் நேரம், வீடியோவின் நடுவில் ஏற்படும் தடுமாற்றங்கள், வீடியோவில் இருக்கும் துல்லியம் தான் அவை" என்றது லண்டனைச் சேர்ந்த தொலைத்தொடர்பு கண்காணிப்பு நிறுவனமான ஓபன்சிக்னல் நிறுவனம்.

இதில் 75-100 மதிப்பெண்கள் எடுக்கும் இடங்கள் 'excellent' எனவும், 65-75 "Very Good" எனவும், 55-65 'Good' எனவும், 40-55 'Fair' எனவும், 0-40 'Poor' எனவும் வகைப்படுத்தப்படுகின்றன. 'Excellent' பிரிவில் எந்த ஒரு நாடும் தகுதி பெறவில்லை. ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 69 நாடுகளில் செக் குடியரசுதான் மொபைல் வீடியோ ஸ்ட்ரீமிங்கில் சிறந்த நாடு என்று அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான நாடுகள் 40-65 மதிப்பெண்கள் இடையில்தான் பெற்றிருக்கின்றன. இந்தியா 38.62 மதிப்பெண்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதைப் போன்ற ஆய்வு மேற்கொள்ளப்படுவது இதுதான் முதல்முறையாம். இதில் அதிவேக இணையம் மட்டும் நல்ல ஸ்ட்ரீமிங்கை தந்து விட முடியாது என்பது தெளிவாக தெரியவந்துள்ளது. ஸ்ட்ரீமிங் தரத்தை மேம்படுத்த மேலும் பல காரணிகள் இருக்கின்றனவாம். இந்தியா தொலைத்தொடர்பு நிறுவனங்களே! எதாவது பார்த்து பண்ணவும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க