பணியிலிருந்து விலகும் இன்ஸ்டாகிராம் நிறுவனர்கள்; பலவீனமடையும் ஃபேஸ்புக் | Instagram co founders leave facebook in dismay

வெளியிடப்பட்ட நேரம்: 05:01 (27/09/2018)

கடைசி தொடர்பு:10:38 (27/09/2018)

பணியிலிருந்து விலகும் இன்ஸ்டாகிராம் நிறுவனர்கள்; பலவீனமடையும் ஃபேஸ்புக்

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தை 2012-ல் வாங்கியது ஃபேஸ்புக். 6 வருடங்களான பிறகும் இன்ஸ்டாகிராமில் பணிபுரிந்துவந்த அதன் நிறுவனர்கள் மைக் க்ரேகேர் மற்றும் கெவின் ஸிஸ்ட்ரோம், தங்கள் பதவியை  ராஜினானாசெய்துள்ளனர். வேறு ஏதாவது புதிதாகச் செய்ய விரும்பி வெளியே வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இன்ஸ்டாகிராம்

ஃபேஸ்புக் வாங்கியதற்குப் பிறகு, மதிப்பில் கிட்டத்தட்ட 10 மடங்கு உயர்ந்துள்ளது இன்ஸ்டாகிராம். சமீபத்தில்தான் 100 கோடி இயங்கும் பயன்பாட்டாளர்களைத் தாண்டியது இந்தப் புகைப்படங்கள் பகிரும் தளம். பேஸ்புக்கிற்கு கிட்டத்தட்டக் கால்வாசி லாபம் இதிலிருந்து மட்டுமே கிடைக்குமாம் 2020ல். இப்படி மிகப் பெரிய லாபம் தரும் முதலீடாக இன்ஸ்டாகிராம் பேஸ்புக்கிற்கு அமைந்துள்ளது. விலகும் இருவரும் மீண்டும் புதிதாக எதையாவது படைக்க வேண்டும் என்றே விலகியதாகக் கூறுகின்றனர். இருப்பினும் இதற்கு வேறு காரணங்கள் இருக்கலாமென நெருங்கிய வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் உடனான கருத்து வேறுபாடு தான் காரணமாக இருக்கலாம் என்கின்றனர். கடந்த சில மாதங்களாகவே பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களின் வளர்ச்சி பற்றிய விவாதங்களில் கடும் வாக்குவாதங்கள் இருதரப்பு இடையிலும் ஏற்பட்டுள்ளதாம். 

இது இப்படி இருக்க மார்க் சக்கர்பெர்க் இருவரும் சிறந்த தலைவர்கள் என்றும், அவர்களிடம் ஆறு வருடங்களில் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டுள்ளதாகவும், அவர்களின் வருங்கால படைப்புகளை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். விலகிய இருவரும் கூட அவ்வப்போது எங்களால் முயன்றவற்றை இந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்காகச் செய்வோம் என்று கூறியுள்ளனர். இருப்பினும் இவர்களின் விலகல் உள்ளளவில் மட்டும் அல்லாமல் வெளியே பங்குச்சந்தையிலும் பேஸ்புக்கிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close