MI பேண்ட் 3, மூன்று மாடல்களில் டிவி... மொபைலைத் தாண்டியும் தெறிக்கவிடும் ஷியோமி! | Xiaomi's new products launched at smarter living event

வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (27/09/2018)

கடைசி தொடர்பு:19:45 (27/09/2018)

MI பேண்ட் 3, மூன்று மாடல்களில் டிவி... மொபைலைத் தாண்டியும் தெறிக்கவிடும் ஷியோமி!

ஷியோமியின் `Smarter Living' விழா இன்று பெங்களூரில் நடந்து முடிந்தது. இதில் தங்கள் மொபைல்களை தவிர்த்து ஷியோமி தயாரிக்கும் மற்ற புதிய சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த விழாவில் என்னென்ன அறிமுகப்படுத்தப்பட்டன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

MI பேண்ட் 3, மூன்று மாடல்களில் டிவி... மொபைலைத் தாண்டியும் தெறிக்கவிடும் ஷியோமி!

Mi Band 3

ஏற்கெனவே இந்த ஃபிட்னெஸ் பேண்ட் பிரிவில் 3 வகையான சாதனங்கள் சந்தையில் உள்ளன. 2015-ல்தான் இந்தச் சந்தைக்குள் வந்ததென்றாலும் இந்திய ஃபிட்னெஸ் பேண்ட் சந்தையின் வருமானத்தில் தற்போது 45.3% பங்கு, ஷியோமி வசம். இதில் கடைசியாக வந்த Mi Band 2 மற்றும் Band 2 (HRX) மாடல்களின் அப்டேட்டாக Mi Band 3 அறிமுகப்படுத்தப்பட்டது. இது சென்ற மாடலில் இருந்த 0.42 இன்ச் OLED சாதாரண ஸ்கிரீனுக்கு பதிலாக 0.78 இன்ச் OLED டச் ஸ்கிரீன் இதில் இருக்கிறது. மேலும் 50 மீட்டர் வரை வாட்டர்ஃப்ரூப், வானிலை அறிக்கை, மெசேஜ்களை வசிக்கும் வசதி எனப் பல கலக்கும் அப்டேட்கள் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வளவு வசதிகள் இருந்தும் இதன் பேட்டரி கிட்டத்தட்ட 20 நாள் தாக்குப்பிடிக்குமாம். இந்த வசதிகள் கொண்ட ஃபிட்னெஸ் பேண்டுகள் கிட்டத்தட்ட 10,000 ரூபாய் விலையில் விற்கப்படும் நிலையில் இது வெறும் 1,999 ரூபாய்க்குக் கிடைக்குமென அறிவித்துள்ளது ஷியோமி. இது நாளை முதல் விற்பனைக்கு வரும். இந்த பேண்டாவது இதற்கு முன் வெளியான பழைய Mi பேண்ட்கள் போல இல்லாமல் ஒழுங்காக சார்ஜ் ஆகுமா என்று பார்ப்போம்.

ஷியோமி

Mi Air Purifier 2S 

உலகில் காற்றுமாசு அதிகம் இருக்கும் முக்கிய நகரங்களில் பெரும்பாலும் சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த நகரங்கள்தாம் இருக்கின்றன. சமீபத்தில்தான் டெல்லியில் கூட இந்தப் பிரச்னை பெரிய செய்தியானது. இதற்காக Mi Air Purifier 2 என்ற காற்றைச் சுத்தப்படுத்தும் சாதனம் ஒன்றை ஏற்கெனவே அறிமுகப்படுத்தியிருந்தது. இதன் அப்டேட்டாக Mi Air Purifier 2S தற்போது அறிமுகப்படுத்தவுள்ளது. இம்முறை இதில் OLED டிஸ்பிளே, வாய்ஸ் கன்ட்ரோல் எனப் பல விஷயங்கள் புதிதாகச் சேர்ந்துள்ளது. இருக்கும் விஷயங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் முன்னிருந்த Mi Air Purifier 2 மாடலை விட இதன் விலை குறைவு. இதன் விலை 8,999 ரூபாய். 400 சதுரஅடி வரை உள்ள காற்றைச் சுத்தப்படுத்தும் இது கூகுள் அசிஸ்டன்ட், அலெக்சா போன்ற வாய்ஸ் கன்ட்ரோல் மென்பொருள்கள் மூலம் கட்டுப்படுத்த முடியும். இதுவும் Mi Band 3-யுடன் நாளை விற்பனைக்கு வரும்.

Air purifier

Mi Luggage 20/24

சிறிய பேக்குகள் மட்டும் தயாரித்து வந்த இந்நிறுவனம் தற்போது அதன் சூட்கேஸ் மாடல்களையும் இன்று அறிமுகப்படுத்தியது. 20 இன்ச், 24 இன்ச் என இரு அளவுகளில் இது விற்பனைக்கு வரும். 360 டிகிரியில் சுற்றும் வீல்கள், TSA சான்றிதழ் பெற்ற லாக் போன்ற பல வசதிகள் கொண்ட இது 2,999 ரூபாய் மற்றும் 4,299 ரூபாய்க்கும் அக்டோபர் 10ம் தேதி கிடைக்கும்.

Luggage

Mi Home Security Camera 360

அடுத்ததாக வீட்டில் பயன்படுத்த கண்காணிப்பு கேமரா ஒன்றை அறிமுகப்படுத்தியது ஷியோமி. 1080p ரெசலூஷனில் வீடியோ எடுக்கும் இது 360 டிகிரி சுற்றி வீடியோ எடுக்கவல்லது. செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் அசைவுகளைக் கண்டறிந்து வீடியோ ரெகார்டு செய்யும் வசதி கொண்டுள்ளது இது. மேலும் இன்ஃப்ரா ரெட் நைட் விஷன், 2 வழி ஆடியோ என வசதிகள் கொண்ட இது 64 GB வரையிலான மெமரி கார்டுகளை சப்போர்ட் செய்யும். இதன் மூலம் கிட்டத்தட்ட 5 நாள்களுக்கு வீடியோக்களை சேமிக்க முடியும். இதன் விலை 2,699 ரூபாய்.

Security

Mi LED TV 4C PRO (32-inch),  Mi LED TV 4 PRO (55-inch), Mi LED TV 4A PRO (49-inch)

கடைசியாக தங்களது புதிய டிவிகளை அறிமுகப்படுத்தியது ஷியோமி. Mi LED TV 4C PRO (32-inch), Mi LED TV 4 PRO (55-inch), Mi LED Tv 4A PRO (49-inch) ஆகிய மூன்று புதிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. கடந்த 6 மாதங்களில் மட்டும் தங்களின் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட டிவிகளை விற்று மிகப்பெரிய ஸ்மார்ட் டிவி நிறுவனமாக உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்தது. தங்களது PatchWall OS-ஸில் பல விஷயங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன எனவும், ஆண்ட்ராய்டு டிவியை மையப்படுத்தி இது வடிவமைக்கப்பட்டுள்ளதால் இனிமேல் ப்ளேஸ்டாரில் டிவிக்கான ஆப்ஸை ஏற்றுக்கொள்ள முடியும். மேலும் முந்தைய மாடல்களில் இல்லாத வாய்ஸ் கன்ட்ரோல் ரிமோட் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்கள் புதிய டிவிகளில் முதலில் வந்தபின்பு பழைய மாடல்களுக்கு வருமாம். இவற்றின் விலை 

Mi Tv

Mi LED TV 4C PRO (32-inch) - 14,999 ரூபாய் 
Mi LED TV 4A PRO (49-inch) - 29,999 ரூபாய் 
Mi LED TV 4 PRO (55-inch) - 49,999 ரூபாய் 
முதல் இரண்டு மாடல்களும் அக்டோபர் 9 அன்றும், கடைசி மாடல் அக்டோபர் 10 அன்றும் விற்பனைக்கு வரும். 

மொபைல் சந்தை மட்டுமல்லாமல் தொட்ட இடத்தில் எல்லாம் வெற்றி கண்டு வரும் ஷியோமியின் இந்தப் புதிய அறிமுகங்களும் நல்ல வரவேற்பையே பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close