வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (28/09/2018)

கடைசி தொடர்பு:13:40 (28/09/2018)

`இந்தியர்கள் அதிக டேட்டாவை டோரென்ட்டில்தான் செலவிடுகிறார்கள்!’ - நீல்சன் ரிப்போர்ட்

ஸ்மார்ட்போன்களில், சராசரியாகத் தினமும் 1 GB டேட்டா செலவழிக்கப்படுவதாக சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. ஓரிரு வருடங்களுக்கு முன்னர், மாத சராசரியே சுமார் 7GB என்ற அளவில்தான் இருந்தது. இதைத் தெரிவித்த 'நீல்சன் இந்திய ஸ்மார்ட்போன் ரிப்போர்ட் 2018', இந்தியா ஸ்மார்ட்போன்கள் விற்பதற்கு மிகவும் சாதகமான சந்தையாக இருந்துவருகிறது என்று தெரிவித்தது.  

டேட்டா

இதுகுறித்து நீல்சன் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் அபிஜித் மட்கர் கூறுகையில், "4ஜி-யின் வளர்ச்சி, குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள், தொலைத்தொடர்பு விலைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் என இந்த விஷயங்கள் எல்லாம் ஸ்மார்ட்போன்கள் இந்தியா முழுவதும் சென்று சேர்வதை எளிதாக்கியுள்ளது" என்றார்.

மேலும், எந்தச் செயலிகள் எந்த அளவு டேட்டா பயன்படுத்துகின்றன என்பதையும் தெரிவித்துள்ளது இந்த ரிப்போர்ட். சாட் மற்றும் பிரௌசர் செயலிகள் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளாக இருக்கின்றன. அதே நேரத்தில், அதிக டேட்டா செலவிடப்படும் செயலிகளில் uTorrent beta செயலி முதலிடம் வகிக்கிறது. இது, டோரென்ட்டுகள் மூலம் திருட்டுத்தனமாக படங்கள் பதிவிறக்கம் செய்ய உதவும் செயலி என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவதாக, யூடியூப் செயலியில் அதிக டேட்டா பயன்படுத்தப்படுகிறதாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க