மார்க் சக்கர்பெர்க்குக்கு தைவான் ஹேக்கர் விடுத்த சவால் - சமாளிக்குமா ஃபேஸ்புக் நிறுவனம்? | Taiwan hacker challenge to Mark zuckerberg

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (29/09/2018)

கடைசி தொடர்பு:09:58 (29/09/2018)

மார்க் சக்கர்பெர்க்குக்கு தைவான் ஹேக்கர் விடுத்த சவால் - சமாளிக்குமா ஃபேஸ்புக் நிறுவனம்?

26,000 பேர் ஃபால்லோப் செய்யும் தைவானைச் சேர்ந்த ஹேக்கரான சாங் சி-யுவான், பேஸ்புக் நிறுவனரான மார்க் சக்கர்பெர்க்கின் ஃபேஸ்புக் கணக்கையே டெலீட் செய்து, அதை லைவ் வீடியோவாகப் பதிவுசெய்வேன் என்று சாவல் விடுத்துள்ளார்.

மார்க் சக்கர்பெர்க்

இவர், எதோ ஒரு வெத்துவேட்டு ஆளும் கிடையாது. ஜப்பான் நிறுவனமான லைன் கார்ப்பின், சிறந்த மென்பொருள் தவறுகள் கண்டுபிடிப்பவர்களுள் ஒருவராக அறிவிக்கப்பட்டார். மேலும், வெறும் ஒரு பேருந்து நிறுவனத்தின் வலைதளத்தை ஹேக் செய்து, ஒரு தைவான் டாலருக்கு டிக்கெட் வாங்கியதாக வழக்குத் தொடரப்பட்டது.

 

 

அவர் இப்பொது பதிவிட்ட பதிவை மொழிபெயர்த்தால், "ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்கின் கணக்கை டெலீட் செய்து லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய உள்ளேன், லைவ்வை காணத் தயாராகுங்கள்" என்று பொருள்பட, இந்த ஞாயிறு செய்ய உள்ளார்.

மார்க்கின் கணக்கு ஹேக் செய்யப்படுவதும் புதிது இல்லை. ஏற்கெனவே 2011-ல் ஒரு ஹேக்க,ர் மார்க்கின் கணக்கில் இருந்து "Let the Hacking Begin" எனப் பதிவிட்டிருந்தார். சவாலை சாங் நிறைவேற்றிவிட்டால், ஏற்கெனவே பல சிக்கல்களில் இருந்துவரும் ஃபேஸ்புக்கிற்கு மேலும் ஒரு அவப்பெயர் ஏற்படும். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்துபார்ப்போம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close