வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (01/10/2018)

கடைசி தொடர்பு:21:45 (01/10/2018)

கூகுள், யூடியூப், ட்விட்டர்... 'ஒரு விரல் புரட்சி'யின் ஒருநாள் டிரெண்ட் ரிப்போர்ட்!

சன் பிக்சர்ஸின் ட்விட்டர் பக்கத்தில் 'ஒருவிரல் புரட்சி' பாடல் மாலை 6 மணிக்கு வெளியாகும் எனப் பதிவிடப்பட்டது. அடுத்த நொடியிலிருந்து ட்விட்டரை தங்கள் கைக்குள் கொண்டுவந்தனர் விஜய் ரசிகர்கள்.

கூகுள், யூடியூப், ட்விட்டர்... 'ஒரு விரல் புரட்சி'யின் ஒருநாள் டிரெண்ட் ரிப்போர்ட்!

விஜய் - ஏ.ஆர்.ரஹ்மான் - பாடலாசிரியர் விவேக் இந்தக் கூட்டணியில் கடந்த ஆண்டு வைரல் ஹிட்  அடித்தது 'ஆளாப்போறான் தமிழன்' பாடல். அதே மேஜிக்கை, சர்கார் படத்தில்  'ஒருவிரல் புரட்சி' என்ற பாடலின் மூலம் மீண்டும் செய்துள்ளது இந்தக் கூட்டணி. செப்டம்பர் 30-ம் தேதியன்று பகல் 12.30 மணிக்கு, சன் பிக்சர்ஸின் ட்விட்டர் பக்கத்தில் 'ஒருவிரல் புரட்சி' பாடல் மாலை 6 மணிக்கு வெளியாகும் எனப் பதிவிடப்பட்டது. அடுத்த நொடியிலிருந்து ட்விட்டரை தங்கள் கைக்குள் கொண்டு வந்தனர் விஜய் ரசிகர்கள். ஒருவிரல் புரட்சி என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் முழுவதும் நிரம்பி வழிந்தது. பாடல் வெளியான பிறகு ட்விட்டர் மட்டுமல்ல; இன்டர்நெட்டின் அனைத்துத் தளங்களையும் அதகளப்படுத்தியது இந்தப் பாடல்.

ட்விட்டர்

சன் பிக்சர்ஸின் ட்விட்டர் பக்கத்தில் பாடலின் பெயர் வெளியானதுமே இந்திய அளவில் டிரெண்டாகத் தொடங்கியது 'ஒருவிரல் புரட்சி' என்கிற ஹேஷ்டேக். இந்த அறிவிப்பு வந்த சில மணி நேரங்களில், நடிகர் விஜய்யின் ட்விட்டர் பக்கத்தில்  'ஒருவிரல் புரட்சி' என்ற வாக்கியத்தோடு விஜய் கையை உயர்த்திக்கொண்டு நடந்து வர, பின்னால் ஓர் இளைஞர் படையே நடந்து வருவதுபோல ஒரு போஸ்டர் வெளியானது. இதன் பிறகு சொல்லவா வேண்டும் அந்தப் போஸ்டரை இதே ஹேஷ்டேக் கொண்டு பதிவிட்டு கொண்டாடித் தீர்த்தனர் விஜய் ரசிகர்கள். இந்தப் புகைப்படத்தின் விளைவாக உலக அளவிலான டிரெண்டிங்கில் இடம்பிடித்தது ஒருவிரல் புரட்சி ஹேஷ்டேக். 

ஒருவிரல் புரட்சி

பொதுவாக, ஒரு குறிப்பிட்ட ஹேஷ்டேக், ட்விட்டரில், இந்திய அளவிலான டிரெண்டிங்கில் சில மணி நேரங்கள் மட்டுமே  இருக்கும், ஆனால், இந்த 'ஒருவிரல் புரட்சி' ஹேஷ்டேக் சுமார் 11 மணிநேரம் ட்விட்டர் டிரெண்டில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. பாடல் வெளியான பிறகு, விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் இந்த ஹேஷ்டேக் கொண்டு பதிவிடத் தொடங்கினர், அதன் விளைவாக  4 லட்சத்துக்கும் அதிகமான ட்வீட்கள் இந்த ஹேஷ்டேக்கில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பாடல் வெளியான அடுத்த 8 மணிநேரத்தில் மட்டும், நடிகர் விஜய்யின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து 1 லட்சத்துக்கும் அதிகமான ட்வீட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாடலாசிரியர் விவேக்கை டேக் செய்து 72,000 ட்வீட்களும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை டேக் செய்து சுமார் 53,000 ட்வீட்களும், ஏ.ஆர்.ரஹ்மானை டேக் செய்து சுமார் 61,000 ட்வீட்களும் பதிவிடப்பட்டுள்ளன. இதுபோக ஒருவிரல் புரட்சி பாடல் யூடியூபில் 3 லட்சம் லைக்குகளை அள்ளியதும் 'ஒருவிரல் புரட்சி ஹிட்ஸ் 300k லைக்ஸ்' என்கிற ஹேஷ்டேக்கும் இந்திய அளவில் டிரெண்டானது. 

ஒருவிரல் புரட்சி

ரசிகர்கள் தவிர நடிகர்கள் சித்தார்த், பிரசன்னா, பிரேம் குமார், சஞ்சிதா ஷெட்டி, இந்துஜா, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், அஜய் ஞானமுத்து, பிரசாந்த், இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, தரன் குமார் உள்ளிட்ட பலரும் ஒருவிரல் புரட்சி ஹேஷ்டேக் கொண்டு ட்வீட் செய்தனர். 

யூடியூப்

ஒருவிரல் புரட்சி பாடலின் வரிகளைக் கொண்ட வீடியோ 6 மணிக்கு யூடியூபில் வெளியாகும் என எதிர்பார்த்துக் காத்திருந்தனர் ரசிகர்கள். டெக்னிக்கல் கோளாறுகளால் சில நிமிடங்கள் தாமதமாகவே வெளியானது இப்பாடல். இருப்பினும் 8 நிமிடங்களில் 1 லட்சம் லைக்குகளைக் கடந்து சாதனை படைத்தது. நடிகர் விஜய்யின் முந்தைய படமான மெர்சல் படத்தின் டீசர், வெளியான 10 நிமிடங்களில் 1 லட்சம் லைக்குகளை அள்ளியதே இதுவரை சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பாடல் வெளியான 70 நிமிடங்களில் 10 லட்சம் பேர் யூடியூபில் இந்தப் பாடலை பார்த்திருந்தனர். 17 மணிநேரத்தில் 30 லட்சம் பேர் இந்தப் பாடலை பார்த்திருப்பதாக ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

ஒருவிரல் புரட்சி

யூடியூபில் அதிகம் லைக் செய்யப்பட்ட பாடல் வரிகள் கொண்ட வீடியோவாக இருந்தது, தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படத்தின் 'இன்கேம் இன்கேம்' பாடல் (6.4 லட்சம் லைக்குகள்). கடந்த வாரம் வெளியான சர்கார் படத்தின் முதல் பாடலான சிம்டாங்காரன் பாடல் இந்தச் சாதனையை முறியடித்து, 6.6 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது. ஒருவிரல் புரட்சி பாடல் இதுவரை  4 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது. கூடிய விரைவில் 'சிம்டாங்காரன்' சாதனைகளை 'ஒருவிரல் புரட்சி' ஓரம்கட்டலாம்.

கூகுள் டிரெண்ட்ஸ்

'ஒருவிரல் புரட்சி' பாடல் வெளியான செப்டம்பர்  30-ம் தேதியன்று உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் இந்தப் பாடல் கூகுளில் தேடப்பட்டுள்ளது. அதில் முதலிடம் பிடித்திருப்பது அண்டை நாடான இலங்கைதான். இந்தியாவுக்கு இராண்டாம் இடம். தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளான கத்தார், ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

ஒருவிரல் புரட்சி

இந்திய அளவில், புதுச்சேரி முதலிடம் பிடிக்க, தமிழகம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. சந்தேகமேயில்லாமல் மூன்றாமிடத்தில் இருப்பது, விஜய்க்கு அதிக ரசிகர்களைக் கொண்ட அண்டை மாநிலமான கேரளம்தான். கர்நாடகா மற்றும் ஆந்திரா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. நேற்று பாடல் வெளியான பிறகு, 50,000-க்கும் அதிகமானோர் 'சர்கார் பாடல்' என்று கூகுளில் தேடியுள்ளனர்.

ஃபேஸ்புக்

பாடலாசிரியர் விவேக் பாடல் வெளியாவதற்கு முன்பே, சில வரிகளைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த வரிகளை ஃபேஸ் புக் ஸ்டேட்டஸ்களாகப் பதிவிட்டு கொண்டாடித் தீர்த்தனர் விஜய் ரசிகர்கள். பாடல் வெளியான பின்பு அப்பாடலின் வரிகளை, தமிழகத்தில் நடந்த சம்பவங்களோடு ஒப்பிட்டுப் பல மீம்களை அள்ளித் தெளித்தனர் ஃபேஸ்புக் வாசிகள். இப்படியாக எல்லா சோஷியல் மீடியாவிலும் ஸ்கோர் செய்திருக்கிறது ஒருவிரல் புரட்சி.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்