``வாட்ஸ்அப்பில் இனிமேல் விளம்பரங்களும் வரும்" -அடுத்த ஆண்டில் அறிமுகம்? | WhatsApp may have introduce ads in next year

வெளியிடப்பட்ட நேரம்: 00:45 (02/10/2018)

கடைசி தொடர்பு:00:45 (02/10/2018)

``வாட்ஸ்அப்பில் இனிமேல் விளம்பரங்களும் வரும்" -அடுத்த ஆண்டில் அறிமுகம்?

 

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்பில் விரைவில் விளம்பரங்கள் இடம்பெறக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்பொழுது வாட்ஸ்அப் செயலியை 1.5 பில்லியன் பேர் பயன்படுத்தி வருகிறார்கள். அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் தவறாமல் இடம்பிடிக்கும் ஆப்களில் ஒன்றாக இது இருந்து வருகிறது. இது தற்பொழுது முற்றிலும் இலவசமான சேவையாகவே இருந்து வருகிறது. ஆனால் மிக விரைவில் அந்த நிலை மாறப்போகிறது. அடுத்த வருடம் முதல் வாட்ஸ்அப்பில் விளம்பரங்கள் காட்டப்படும். வாட்ஸ்அப் தொடக்கத்தில் வருடத்திற்கு ஒரு முறை பணம் செலுத்தும் வகையில் இருந்து வந்தது.

வாட்ஸ்அப்

அதன் பின்னர் கடந்த 2014 -ம் ஆண்டில் 19 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாட்ஸ்அப்பை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது. ஆனால் சில மாதங்களிலேயே அதன் நிறுவனர்களுக்கும் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து வாட்ஸ்அப்பிலிருந்து வெளியேறினார்கள். வாட்ஸ்அப்பை ஃபேஸ்புக் வாங்கிய பிறகு அதில் பல மாற்றங்களைச் செய்தது. அதைக் கட்டணமின்றி பயன்படுத்தலாம் என அறிவித்தது. ஆனால் அதற்குப் பதிலாக ஆப்பில் விளம்பரங்களைக் காட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தது. அதன்படி இது நடைமுறைக்கு வந்தால் வாட்ஸ்அப்பில் சாட் பகுதியில் உள்ளே விளம்பரங்கள் காட்டப்படாது. அதற்கு மாறாக மற்றவர்களின் ஸ்டேட்டஸ்களைப் பார்வையிடும் போது அதனிடையே காட்டப்படும். iOS சாதனங்களில் இது பரிசோதிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தற்பொழுது வெளியாகியிருக்கின்றன. இன்னும் சில மாதங்கள் கழித்து அடுத்த வருடத் தொடக்கத்தில் அனைத்து இயங்குதளங்களில் இயங்கும் வாட்ஸ்அப் செயலிகளில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 


[X] Close

[X] Close