1000 ரூபாய் பட்ஜெட்... எந்த பவர்பேங்க் பெஸ்ட்? #BuyingGuide | best powerbanks under 1000 rupees

வெளியிடப்பட்ட நேரம்: 12:34 (03/10/2018)

கடைசி தொடர்பு:12:34 (03/10/2018)

1000 ரூபாய் பட்ஜெட்... எந்த பவர்பேங்க் பெஸ்ட்? #BuyingGuide

1,000 ரூபாய்க்குள் பவர்பேங்க் வாங்க வேண்டுமென்றாலே, MI மட்டும்தான் நினைவுக்கு வரும். அதைத் தாண்டியும் சில நல்ல பவர்பேங்க்குகள் இருக்கின்றன.

1000 ரூபாய் பட்ஜெட்... எந்த பவர்பேங்க் பெஸ்ட்? #BuyingGuide

ஸ்மார்ட்போன் என்பது அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாகி விட்ட நிலையில் அதை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருப்பது அவசியமாகி விட்டது. ``என்னதான் காலையில் ஃபுல் சார்ஜ் போட்டாலும் மதியம் வரைக்கும் கூட பேட்டரி தாங்கலையே" என்று வருத்தப்படுபவர்களுக்குக் கைகொடுப்பது பவர் பேங்க்குகள்தான். அது மட்டுமன்றி ஏதேனும் அவசரமாக வெளியே கிளம்ப வேண்டியிருந்தாலோ, பயணம் செய்யும் போதோ இவை நிச்சயம் தேவைப்படும். 1000 ரூபாய்க்குக் கீழே கிடைக்கக்கூடிய சிறந்த பவர் பேங்க்குகள் இவை.

Mi Power Bank 2i

Mi Power Bank 2i

தொடக்கத்தில் அனைத்து பவர் பேங்க்குகளையும் சீனாவில் இருந்தே இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்து கொண்டிருந்தது ஷியோமி. தற்பொழுது `மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் தற்பொழுது இந்தியாவிலேயே இதைத் தயாரிக்கிறது. சந்தையில் இருக்கும் பவர்பேங்க்குகளின் வெளிப்புறம் பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால், இது மெட்டலால் கட்டமைக்கப்பட்டிருப்பதால் ப்ரீமியம் லுக்கைத் தரும். அதே நேரத்தில் உறுதியாகவும் இருக்கும். கைக்கு அடக்கமாக, மேலிதாக இருக்கக்கூடிய பவர் பேங்க் இது. எடையும் சற்றுக் குறைவாகவே இருக்கும் என்பதால் அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் செல்வதும் எளிதாக இருக்கும்.10000 mAh திறன் கொண்ட இதிலிருந்து 6500 mAh அளவுக்கு அவுட்புட் பவர் கிடைக்கும். இதில் 2 அவுட்புட் போர்ட்கள் இருக்கின்றன.

 
விலை - 799 ரூபாய் 

Philips DLP6006B 

Philips DLP6006B 


ஒரே நேரத்தில் அதிகமான மொபைலுக்கு சார்ஜ் ஏற்ற வேண்டும் என்பவர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும். 3 அவுட்புட்கள் இருப்பதால் ஒரே நேரத்தில் 3 ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதில் இருக்கும் சிறிய LCD ஸ்க்ரீனில் பவர் பேங்கில் எவ்வளவு சார்ஜ் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். சிறிய எல்இடி லைட் ஒன்றும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது 11000 mAh திறனைக் கொண்டது. இதன் எடை சற்று அதிகமாக இருக்கும் என்பதால் கையில் எடுத்துச் செல்வதற்கு சிரமமாக இருக்கக்கூடும். மற்றபடி இதன் செயல்திறன் சிறப்பாகவே இருக்கும். 

விலை - 999 ரூபாய்

ivoomi iV-PBP20K2 

 

ivoomi iV-PBP20K2


ஷியோமி பவர் பேங்க்கிற்கு அடுத்ததாகச் சிறந்த வசதிகளைக் கொண்டது இது. 10000 mAh திறன்கொண்ட இதன் மூலமாக ஒரே நேரத்தில் இரண்டு மொபைல்களை சார்ஜ் செய்ய முடியும். பவர்பேங்க்கில் எவ்வளவு சார்ஜ் இருக்கிறது என்பதை இதன் வெளிப்புறத்தில் வரையப்பட்டிருக்கும் எல்இடிக்கள் மூலமாக அறிந்துகொள்ள முடியும். 71% முதல் 100% சார்ஜ் இருந்தால் பச்சை நிறத்திலும், 31% முதல் 70% வரை இருந்தால் நீல நிறத்திலும் மற்றும் 1% முதல் 30% வரை இருந்தால் சிவப்பு நிறத்திலும் ஒளிரும். 

விலை - 899 ரூபாய்

Ambrane P-1133

Ambrane P-1133 பவர்பேங்க்

வெளியே கொடுக்கப்பட்டிருக்கும் லெதர் வடிவமைப்பு ப்ரீமியம் லுக்கைத் தரும். 12500 mAh திறன் கொண்டது இது. மற்ற பவர் பேங்க்குகள் போல இல்லாமல் இது 5 வண்ணங்களில் கிடைக்கிறது. 2 அவுட்புட் போர்ட்கள் இதில் இருக்கின்றன. 

விலை - 899 ரூபாய்

Intex IT-PB13K

Intex IT-PB13K பவர் பேங்க்

இதில் 2 அவுட்புட் போர்ட்கள் இருப்பதால் ஒரே நேரத்தில் 2 மொபைல்களை சார்ஜ் செய்ய முடியும். அதில் ஒரு போர்ட் மூலமாக பாஸ்ட் சார்ஜ் வசதியையும் பெற முடியும். ஆனால் இது ஒருமுறை சார்ஜ் ஏறுவதற்கு 6 மணி நேரத்துக்கு மேல் ஆகும் என்பது இதன் குறை. 

விலை - 899 ரூபாய்
 


டிரெண்டிங் @ விகடன்