திடீரென வெடித்த ஸ்மார்ட்போன்; பதிலளிக்குமா ஷியோமி நிறுவனம்? | Xiaomi Mi A1 smartphone explodes

வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (04/10/2018)

கடைசி தொடர்பு:07:15 (04/10/2018)

திடீரென வெடித்த ஸ்மார்ட்போன்; பதிலளிக்குமா ஷியோமி நிறுவனம்?

ஷியோமி

ஷியோமி நிறுவனத்தின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பொதுவாக ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுவது வழக்கம். சூடாவது உண்மைதான் என்றாலும் வெடிக்குமா என்பது சந்தேகம்தான். கடந்த வருடம் கூட சில ரெட்மி மொபைல்கள் வெடித்த சம்பவங்கள் நிகழ்ந்தன. ஆனால், அதன்பிறகு ஏதும் நடக்கவில்லை. இந்த நிலையில், MIUI ஃபோரமிலில் (forum ) ஒருவர் அவருடைய நண்பரின் Mi A1 ஸ்மார்ட்போன் சார்ஜ் ஏறும்போது வெடித்ததாகத் தகவலைப் பதிவிட்டுள்ளார்.

ஸ்மார்ட்போன்

``எனது நண்பர் தூங்கும்போது Mi A1 ஸ்மார்ட்போனை அருகில் வைத்திருந்தார். அப்பொழுது அது வெடித்துச் சிதறியது. வெளிப்புறத்தில் கவர் மட்டும் இல்லையென்றால் இந்த வெடிப்பின்போது அவர் அதிகமாகக் காயம் அடைந்திருக்கக்கூடும். அந்த மொபைலை வாங்கி எட்டு மாதங்கள் ஆகியும் இதற்கு முன்பு வரை எந்த பிரச்னையும் ஏற்படவில்லை" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே யாரும் Mi A1 ஸ்மார்ட்போனை அருகில் வைத்து உறங்க வேண்டாம் என எச்சரிக்கை செய்திருக்கிறார். ஷியோமி நிறுவனம் இந்தச் சம்பவத்தைப் பற்றி விசாரித்த பிறகே இது உண்மையாகவே நடந்ததா, அப்படியென்றால் எதற்காக வெடித்தது என்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


[X] Close

[X] Close