உலகின் வல்லரசு நாடுகளை நடுநடுங்கவைத்த விக்கிலீக்ஸுக்கு இன்று பிறந்தநாள்! | 12 years ago WikiLeaks founded today

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (04/10/2018)

கடைசி தொடர்பு:17:20 (04/10/2018)

உலகின் வல்லரசு நாடுகளை நடுநடுங்கவைத்த விக்கிலீக்ஸுக்கு இன்று பிறந்தநாள்!

லகின் வல்லரசு நாடுகளையும், பெருமுதலாளிகளையும் ஆதாரங்கள்மூலம் அம்பலப்படுத்தி, நடுநடுங்கவைத்த செய்தி நிறுவனம், விக்கிலீக்ஸ். இந்த இணையதளம் 2006, அக்டோபர் மாதம் இதே நாளில்தான் தொடங்கப்பட்டது. தொடங்கியவர், ஜூலியன் அசாஞ்சே.

இவர், ஆஸ்திரேலியாவில் பிறந்தவர். சிறுவயது முதல் ஹேக்கிங், கோடிங் போன்றவற்றில் ஆர்வமாய் இருந்தார். 1987ல், 'மெடேக்ஸ்' என்ற பெயர் மூலம் மோட்டோரோலா, பேனஸோனிக், அமெரிக்க கப்பற்படை, பாதுகாப்புப் படை, பென்டகன் போன்றவற்றை ஹேக் செய்ததற்காக, 17 வயதில் அவரை சிறையில் அடைத்தனர். பின்னர், நன்னடத்தை காரணமாக 1996ல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதன்பிறகு, 2006ல் விக்கிலீக்ஸ் இணையதளத்தைத் தொடங்கினார். 

விக்கிலீக்ஸ்

இதுவரை உலக அரசியலில் பல்வேறு முக்கியமான ஆவணங்களை வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ். 2010 ஏப்ரலில், அமெரிக்கா இராக்கில் செய்த போர்க்குற்றம் பற்றிய 77,000 ஆவணங்களையும், அமெரிக்கா பிறநாட்டு அரசியல் தலைவர்களின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்பதையும் ஆதாரத்துடன் போட்டுடைத்தது. இதேபோல, அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ எப்படி ஆண்ட்ராய்டு, விண்டோஸ் மொபைல்களின் மைக்ரோபோன்களை ஹேக் செய்கிறது என்பதுகுறித்தும் 8,761 பக்க ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியது. இதில் கொந்தளிப்பு அடைந்த அமெரிக்கா, அவரைக் கைதுசெய்ய உத்தரவிட்டது. பின்னர், அங்கிருந்து ஸ்வீடன் சென்று அங்கு பாலியல் புகார் ஒன்றில் சிக்கி, பிறகு தப்பித்து, ஈக்குவடார் நாட்டுத் தூதரகத்தில் தஞ்சமடைந்தார். அங்கிருந்தும் தொடர்ச்சியாக இயங்கிவந்தார் அசாஞ்சே. அங்கே இருந்தபோதுதான், ஹிலரி கிளின்டனின் மின்னஞ்சல்கள் வெளிவந்தன. இதில் அமெரிக்கா கடுப்பாகவே, பின்னர் அசாஞ்சேவின் இணைய சேவைகளுக்குத் தடைவிதித்தது ஈக்குவடார். இன்றுடன் விக்கிலீக்ஸ் தொடங்கப்பட்டு 12 ஆண்டுகள் முடிவடைகிறது.  விக்கிலீக்ஸின் லீலைகள் இன்னும் தொடரும் என எதிர்பார்ப்போம்.
 


[X] Close

[X] Close