வெளியிடப்பட்ட நேரம்: 14:54 (06/10/2018)

கடைசி தொடர்பு:14:54 (06/10/2018)

இன்னும் 10 நாள்களில் இன்ப அதிர்ச்சி கொடுக்கப்போகும் அமேசான், ஃப்ளிப்கார்ட்!

இன்னும் ஒரு வாரத்தில் வருகிறது இந்திய ஆன்லைன் சந்தைகளின் சிறப்பு விற்பனை காலம். அமேசான் 'Great Indian Sale' (அக்டோபர் 10-14) என்றும் ஃப்ளிப்கார்ட் 'The Big Billion Days' (அக்டோபர் 10-15) என்றும் இந்தச் சிறப்பு சலுகை விற்பனைகளைத் தொடங்கவுள்ளன. இதில் சில முக்கிய மொபைல் சலுகைகள் என்னென்னவென்று தெரியவந்துள்ளது. 

மொபைல்

ஃப்ளிப்கார்ட் 'The Big Billion Days'

சாம்சங் Galaxy On6 இதுவரை கிடைக்காத குறைந்த விலையில் கிடைக்குமாம். 15,490 ரூபாய் MRP விலையாகக் கொண்ட இது 11,990 ரூபாய்க்கு விற்பனைக்கு வரும். இதேப் போன்று சாம்சங் On Nxt 9,990 ரூபாய்க்கு விற்பனைக்கு வரும் (MRP Rs. 17,990). மேலும் தங்கள் செயலியில் தான் ஐபோன் விலைகள் மிகவும் குறைவாக இருக்கும் என்றும் விளம்பரம் செய்துவருகிறது ஃப்ளிப்கார்ட்.

மேலும் ஃப்ளாஷ்சேல்களில் Samsung's Galaxy S8 வெறும் 29,990 ரூபாய்க்கு ( MRP 49,990 ) கிடைக்கும் எனத் தெரிகிறது. இந்த ஃப்ளாஷ்சேல்களில் Lenovo K8 Plus ரூபாயிலும் 6,999 (MRP 10,999), Honor 10 (6GB) 24,999 ரூபாயிலும் (MRP 35,999), Moto Z2 Force 17,499 ரூபாயிலும் (MRP 34,999), Moto X4 10,999 ரூபாயிலும் (MRP 20,999), Oppo A71 (3GB) 6,990 ரூபாயிலும் (MRP 10,990), Moto Z2 Play Rs. 9,999 ரூபாயிலும்( MRP 27,999) கிடைக்குமாம். இதுபோகவும் பல போன்களில் சலுகைகள் இருக்குமாம்.

அமேசான் 'Great Indian Festival'

ஒன் ப்ளஸ் 6 முதல்முறையாக  29,999 ரூபாய்க்கு விற்பனைக்கு வரும். இதுவரை இது 34,999 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. மேலும் MI A2 முதல்முறையாக விலை குறைத்து விற்கப்படுமாம். இந்த நாள்களில் வாங்கப்படும் மொபைல்களுக்கு ஸ்கிரீன் உடைந்தால் இலவசமாக ஸ்கிரீன் மாற்றும் வசதி செய்துதரப்படலாம் எனத் தெரிகிறது. சாம்சங் Galaxy Note 8 மாடலுக்கு எக்ஸ்சேஞ் சலுகைகள் இருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது போக மைக்ரோ-USB கேபிள், மற்றும் பேசிக் ஹெட்செட்டுகள் குறைந்தவிலையில் விற்பனைக்கு வருமாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க