வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (08/10/2018)

கடைசி தொடர்பு:13:15 (08/10/2018)

`59% பேர் விரும்புவது ஒன்ப்ளஸ் தான்!' - MICI ரிப்போர்ட்

சமீபத்தில் நடந்த ஒரு கருத்துக்கணிப்பில் இந்தியாவில் பிரீமியம் ஸ்மார்ட் போன்கள் வாங்க விரும்புபவர்கள் ஆப்பிள் போன்களைவிட ஒன்ப்ளஸ் வாங்கவே அதிக விருப்பம் தெரிவிப்பதாக தெரியவந்துள்ளது.

சைபர்மீடியா ரிசர்ச் (CMR) நடத்திய இந்தக் கருத்துக்கணிப்பில் தாங்கள் அதிகம் எதிர்பார்க்கும் போன்கள் எந்த நிறுவனத்துடையது என்ற கேள்விக்கு 36 சதவிகிதம் ஒன்ப்ளஸ் என்றும் 34 சதவிகிதம் ஆப்பிள் என்றும் 18 சதவிகிதம் சாம்சங் என்றும் பதிலளித்துள்ளனர். 

ஒன்ப்ளஸ்

மேலும், இந்த CMR வெளியிட்ட 'Mobile Industry Consumer Insight'(MICI) அறிக்கையின்படி இளம் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒன்ப்ளஸ்க்கு தான் அதிக மவுசும் நம்பிக்கையும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. 18லிருந்து 32 வயதுடையவர்களில் 59 சதவிகிதம் பேர் ஒன்ப்ளஸ் மொபைல்களையே வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

டெல்லி, மும்பை, புனே, பெங்களூரு, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை ஆகிய இடங்களில் நடந்த இந்த MICI கருத்துக்கணிப்பில் மாணவர்கள், வேலைபார்ப்பவர்கள் என அனைவரும் பங்குகொண்டனர். 

மேலும், தற்போது இருக்கும் நிறுவனத்தில் இருந்து எந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு மாற விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு ஆப்பிள் வாடிக்கையாளர்களில் அதிகமானோர் (9 சதவிகிதம்) ஒன்ப்ளஸ்ஸையே தேர்ந்தெடுத்துள்ளனர். சாம்சங் (15 சதவிகிதம்), விவோ (16 சதவிகிதம்) ஆகிய நிறுவனங்களின் வாடிக்கையாளர்களும் ஒன்ப்ளஸ்ஸையே அதிகமாக தேர்ந்தெடுத்துள்ளனர். 

50,000 ரூபாய்க்கும் மேலான விலையில் இருக்கும் போன்கள் பயன்படுத்துபவர்களில் 12 சதவிகிதம் பேர் ஒன்ப்ளஸ்க்கு மாறவே விரும்புகின்றனர். இதற்குக் காரணமாக பார்க்கப்படும் வசதிகள் AR மற்றும் VR சப்போர்ட், ஸ்கிரீனில் இருக்கும் ஃபிங்கர்பிரின்ட் சென்சார், வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவைதானாம். ஒன்ப்ளஸ் 6T விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க