``ஆம், ஃபேஸ்புக் பாதுகாப்பாக இல்லை!’’ - சர்வே முடிவுகள் #VikatanSurveyResults | Facebook is not safe now - vikatan survey results

வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (08/10/2018)

கடைசி தொடர்பு:18:45 (08/10/2018)

``ஆம், ஃபேஸ்புக் பாதுகாப்பாக இல்லை!’’ - சர்வே முடிவுகள் #VikatanSurveyResults

ஃபேஸ்புக் குறித்த மக்களின் எண்ணம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது.

``ஆம், ஃபேஸ்புக் பாதுகாப்பாக இல்லை!’’ - சர்வே முடிவுகள் #VikatanSurveyResults

கொஞ்சம் கொஞ்சமாக உலகில் பல்வேறு இடங்களிலிருந்தும் `Delete Facebook' என்ற கோஷம் வலுத்துவருகிறது. உலகின் அரசியல் ரீதியான முடிவுகளில் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துகிறது என்ற சந்தேகம் ஒரு பக்கம்; ஹேக்கிங் போன்ற சம்பவங்களால் களவுபோகும் தகவல்கள் ஒரு பக்கம். இந்த இரண்டு விஷயங்களும் ஃபேஸ்புக் மீது அதன் பயனாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையே சிதைக்கின்றன. இந்நிலையில் இன்னும் ஃபேஸ்புக்கை நம்புகிறீர்களா என விகடன் வாசகர்களிடம் கேட்டிருந்தோம். அதற்கு அவர்கள் அளித்த பதில்கள் கீழே.

"ஃபேஸ்புக்கை இன்னும் பாதுகாப்பானது என நம்புகிறீர்களா?" என்ற கேள்விக்கு 52 சதவிகிதம் பேர் இல்லையென்றே தெரிவித்துள்ளனர். கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா சம்பவத்துக்குப் பிறகு, அந்நிறுவனத்தின் மீதான மொத்த பிம்பமும் சரிந்து விழுந்தது. அதைத் தூக்கிநிறுத்தும் வகையில் மார்க்கின் செயல்பாடுகள் இல்லை. அதைத்தான் இந்தப் பதிலும் உணர்த்துகிறது. 

ஃபேஸ்புக் சர்வே முடிவுகள்

"பயனாளர்களின் பிரைவசி மீது ஃபேஸ்புக் அக்கறையுடன் செயல்படுகிறதா?" என்ற கேள்விக்கு 32 சதவிகிதம் பேர் இல்லையெனவும், 64 சதவிகிதம் பேர் 'வணிக நோக்கத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு ஃபேஸ்புக் செயல்படுகிறது" என்றும் பதிலளித்துள்ளனர். வணிக நோக்கத்துடன் ஒரு நிறுவனம் இயங்குவதில் தவறில்லை; ஆனால், அதன் பயனாளர்களின் பாதுகாப்புக்கும் பிரைவசிக்கும் அந்நிறுவனம் ஆபத்து விளைவிக்கிறதோ என்ற அச்சம் பொதுவாகவே எழுந்துள்ளது. 

Facebook சர்வே முடிவுகள்

மார்க் சக்கர்பெர்க் - ஃபேஸ்புக்; ஒரே பொருள் தரும் இருவேறு சொற்கள் இவை. மார்க்கின் சொல்தான் ஃபேஸ்புக்கின் சாசனம். மார்க்கின் வார்த்தைகள்தான் பயனாளர்களின் நம்பிக்கை. ஆனால், சமீபகாலமாக மார்க் சக்கர்பெர்க்கின் பதில்கள் அனைத்தும் ஃபேஸ்புக்கின் ஒருபக்கத்தை மட்டுமே பார்ப்பதாக இருக்கின்றன. இதற்கு முன்பு விசாரணை கமிஷன்களில் ஆஜராகி அளித்த பதில்களிலும் ஹேக்கிங் குறித்து விளக்கமளித்துள்ள பதிலிலும் ஃபேஸ்புக்கின் தற்காப்பு மட்டுமே பிரதானமாக இருக்கிறது. புதிய நம்பிக்கை எதுவும் இல்லை. அதனால்தான் 54 சதவிகித வாசகர்கள் மார்க்கே நினைத்தாலும் ஃபேஸ்புக்கின் மீது நடக்கும் தாக்குதல்களை இனி தடுக்க முடியாது எனப் பதிலளித்திருக்கின்றன்ர்.

Facebook survey result

``இனியும் ஃபேஸ்புக்கைத் தொடர்ந்து பயன்படுத்துவீர்களா?" என்ற கேள்விக்கு 36 சதவிகிதம் மட்டுமே `ஆம்’ எனப் பதிலளித்துள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், 52 சதவிகிதம் பேர் பயன்படுத்த அச்சமாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளதைத்தான்.

Facebook survey Result

சோஷியல் மீடியா மற்றும் இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்களைத் தாண்டியும் அதிக வரவேற்பு பெற்றுக்கொண்டிருப்பவை வீடியோ ஆப்ஸ். எனவே ஃபேஸ்புக்கைவிடவும் யூடியூப், டிக்டோக் போன்றவற்றில் அதிகநேரம் செலவிடுகிறார்கள். ``ஃபேஸ்புக் தவிர்த்து வேறு எந்த ஆப்பை அதிகம் பயன்படுத்துகிறீர்கள்?" என்ற கேள்விக்கான பதிலிலும் இது எதிரொலித்துள்ளது. டிக்டோக்கை 2 சதவிகிதம் பேரும் யூடியூபை 23 சதவிகிதம் பேரும் பயன்படுத்துவதாகப் பதிலளித்துள்ளனர். 50 சதவிகிதம் பேர் வாட்ஸ்அப் எனக் கூறியிருக்கின்றனர். அதற்கான மவுசு இன்னும் குறையவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. இதில் இன்னொரு ஆச்சர்யம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துவரும் இன்ஸ்டாகிராம் பயன்பாடு.

Facebook survey result

``ஃபேஸ்புக் முன்புபோல இப்போது சுவாரஸ்யமாக இல்லை என்பதை ஏற்றுக்கொள்வீர்களா?’’ என்ற கேள்விக்கு சர்வே முடிவுகளைப் பார்க்காமலே பதில் சொல்லிவிடலாம். `ஆம்’ என்பதுதான் 77 சதவிகிதம் பேரின் பதில்.

Facebook surevey

ஆக, ஃபேஸ்புக் பாதுகாப்பு தொடர்பான சிக்கலில் மட்டுமல்ல; அதன் போட்டியாளர்கள், சுவாரஸ்யமற்ற தன்மை, பிரைவசி சிக்கல்கள் உள்ளிட்ட அம்சங்களாலும் வாடிக்கையாளரைவிட்டு மெதுவாக விலகிச் சென்றுகொண்டிருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close