வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (09/10/2018)

கடைசி தொடர்பு:14:55 (09/10/2018)

`Boss' ஆகணுமா? ஃப்ளிப்கார்ட்டுடன் பேரம் பேசத் தயாராகுங்கள்!

ஃப்ளிப்கார்ட்டின் சிறப்பு விற்பனை காலமான `பிக் பில்லியன் டேஸ்' சேல் வரும் அக்டோபர் 10-ம் தேதி தொடங்கவுள்ளது. இதில் எப்போதும் இருக்கும் சிறப்புச் சலுகைகளுடன் இம்முறை பேரம் பேசும் வசதியையும் அறிமுகப்படுத்தவுள்ளது ஃப்ளிப்கார்ட். கூகுள் அசிஸ்டன்ட் உதவியுடன் ஒரு பாட் மூலம் இதைச் செய்யவிருக்கிறது ஃப்ளிப்கார்ட். கூகுள் ஜூ என்னும் கூகுளின் சிறப்புக் குழுவுடனான தங்களது பார்ட்னர்ஷிப்பையும் சமீபத்தில் அறிவித்திருந்தது.

ஃப்ளிப்கார்ட்

இந்தச் சிறப்பு விற்பனைக் காலத்தின் ஒவ்வொரு நாளிலும் வாடிக்கையாளர்கள் பேரம் பேச 2 புதிய பொருள்கள் அறிமுகப்படுத்தப்படும். இதை உங்களது போனில் இருக்கும் கூகுள் அசிஸ்டன்ட் வழியாகப் பேரம் பேசிக் குறைந்த விலையில் வாங்க முயற்சி செய்யலாம். டைப் செய்யாமல் ஃப்ளிப்கார்ட் Hagglebot என்னும் பாட் உடன் பேசியே இதைச் செய்யமுடியும். நாளின் முடிவில் சிறந்த முறையில் பேரம் பேசிவருக்கு `Boss' என்று பட்டம் சூட்டப்படும். அவர் நிர்ணயித்த விலையில் அந்தப் பொருள் அனைவருக்கும் விற்பனைக்கு வரும். `Boss' பட்டம் பெற்றவருக்கு இலவசமாக அந்தப் பொருள் கிடைக்கும்.

இது போக சிறப்புச் சலுகைகள் இந்தச் செயற்கை நுண்ணறிவு Hagglebot மூலம் கிடைக்குமாம். உண்மையில் பேரம் பேசுவதைப் போன்ற ஓர் அனுபவத்தை வாடிக்கையாளருக்குத் தர ஃப்ளிப்கார்ட்டுன் நெருங்கி இதற்காக வேலைசெய்து வருகிறது கூகுள் ஜூ. இந்திய மக்களிடம் பேரம் பேசுவது என்பது ஷாப்பிங் செய்வதின் ஓர் அங்கமாக ஆகிவிட்டதால் இணையத்திலும் இந்த அனுபவத்தை மக்கள் பெறவே இந்த முயற்சியாம். கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட்டைத் திறந்து, `Talk to Flipkart' என்றால் இந்த அசிஸ்டன்ட் பாட் செயல்படத் தொடங்கும். 

DialogFlow என்னும் மென்பொருளை மையமாக வைத்துக் கட்டமைக்கப்பட்ட இது கூகுள் கிளவுட், natural language processing, மெஷின் லேர்னிங் போன்ற தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகிறது. இந்த அனுபவம் எப்படி இருக்கிறது என்பதை விரைவில் டெஸ்ட் செய்துவிடலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க