வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (10/10/2018)

கடைசி தொடர்பு:00:00 (10/10/2018)

ஃபேஸ்புக் அறிமுகப்படுத்திய ஸ்மார்ட் கேட்ஜெட்! - ப்ரைவசி பாதிக்காமல் இருக்குமா?

ஃபேஸ்புக்

சமீப காலமாக எதிர்கொண்டு வரும் பல சிக்கல்களுக்கு இடையே ஒரு புதிய கேட்ஜெட்டை நேற்று அறிமுகப்படுத்தியிருக்கிறது ஃபேஸ்புக் நிறுவனம். போர்ட்டல் (Portal) என்று பெயரிடப்பட்டுள்ள, இதன் மூலமாக பேஸ்புக் பயனாளர்களிடையே வீடியோ மற்றும் வாய்ஸ் காலிங் செய்ய முடியும். அமேசான், ஆப்பிள், மைக்ரோசாப்ட் என அனைத்து நிறுவனங்களுமே வீடுகளில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கேட்ஜெட்களில் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வரிசையில் தற்பொழுது ஃபேஸ்புக்கும் இனைந்திருக்கிறது. போர்ட்டல் மற்றும் போர்ட்டல் பிளஸ் என இரண்டு வேரியன்ட்களில் இது விற்பனைக்கு வரும்.

போர்ட்டல்

இதில் போர்ட்டல் 10.1-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டது, இதிலிருக்கும் 12MP வைட் ஆங்கிள் கேமரா வீடியோ காலிங் செய்வதற்கு உதவும். போர்ட்டல் பிளஸ் சற்று பெரிதாக 15.6 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டது. இதிலும் 12MP கேமரா இருக்கிறது. சமீப காலமாகவே ப்ரைவசி தொடர்பான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது ஃபேஸ்புக். எனவே இதிலாவது எங்கள் ப்ரைவசி பாதிக்கப்படாமல் இருக்குமா எனக் கேள்வி எழுப்பி வருகிறார்கள் இணையவாசிகள். ஆனால் இதில் மேற்கொள்ளப்படும் அழைப்புகள் அனைத்தும் என்கிரிப்ஷன் செய்யப்படுவதால் நாங்கள் அவற்றைப் பதிவு செய்யவோ, ஒட்டுக்கேட்கவோ முடியாது என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.