வெளியிடப்பட்ட நேரம்: 15:21 (10/10/2018)

கடைசி தொடர்பு:15:21 (10/10/2018)

₹ 2,000 பிரின்டர், ₹ 9,000 ஸ்மார்ட் டிவி... ப்ளிப்கார்ட், அமேசானில் குவியும் டீல்ஸ்!

மொபைல், ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் ஸ்பீக்கர்ஸ் போன்றவற்றுக்கு அதிகமான டீல்கள் இருக்கின்றன.

₹ 2,000 பிரின்டர், ₹ 9,000 ஸ்மார்ட் டிவி... ப்ளிப்கார்ட், அமேசானில் குவியும் டீல்ஸ்!

வ்வொரு வருடமும் பண்டிகைக்காலங்களை முன்னறிவிப்பு செய்யும் விஷயங்களாக மாறிவிட்டன இ-காமர்ஸ் நிறுவனங்களின் ஷாப்பிங் கொண்டாட்டங்கள். இந்த வருடமும் அதேபோல கோலாகலமாகத் தொடங்கி நடந்துகொண்டிருக்கின்றன. இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே சேல் தொடங்கியிருப்பதால், பலரும் தங்கள் சம்பளப் பணத்தை ஷாப்பிங்கிற்காகச் செலவிட வாய்ப்பு அதிகம். மேலும், அடுத்த மாதம் தொடக்கத்தில் தீபாவளி வருவதால், இந்த மாத இறுதியில்தான் மக்களின் ஷாப்பிங் சூடுபிடிக்கும். அப்போது ஆஃப்லைன் விற்பனையும் அதிகரிக்கும். ஆனால், இ-காமர்ஸ் நிறுவனங்கள் அதற்கு முன்பாகவே விற்பனையைத் தொடங்கிவிட்டதால் எலக்ட்ரானிக் பொருள்கள், வீட்டுக்குத் தேவையான பர்னிச்சர்கள், மொபைல் போன்கள் போன்றவை நிச்சயம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும். இதுதான் இந்நிறுவனங்களின் இலக்கும்கூட. அமேசான் 10 முதல் 15-ம் தேதி வரையிலும், ஃப்ளிப்கார்ட் 10 முதல் 14-ம் தேதி வரையிலும் சலுகைகளை வழங்குகின்றன. இதில் மிஸ் பண்ணக்கூடாத கேட்ஜெட் டீல்ஸ் சிலவற்றைப் பார்ப்போம்.

ஃப்ளிப்கார்ட்டின் சலுகைகள்

பிக் பில்லியன் டே ஆஃபரில் மொபைல், ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் ஸ்பீக்கர்ஸ் போன்றவற்றுக்கு அதிகமான டீல்கள் இருக்கின்றன. 

1. கூகுளின் வாய்ஸ் அசிஸ்டன்ட் ஸ்மார்ட் ஸ்பீக்கரான கூகுள் ஹோம் மினி 2449 ரூபாய்க்குக் கிடைக்கிறது. ஹோம் மாடல் 6,999 ரூபாய்க்குக் கிடைக்கிறது.

2. பிலிப்ஸ் நிறுவனத்தின் ட்ரிம்மர் QT3310 மாடல் 899 ரூபாய்க்குக் கிடைக்கிறது. இதன் விலை 1,360 ரூபாய்.

3. கூகுளின் குரோம்காஸ்ட்டின் விலை 2,400 ரூபாய் குறைந்து, 1,999 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்திருக்கிறது.

4. Mi பேண்டின் HRX எடிஷன் 1,799-ல் இருந்து 800 ரூபாய் விலை குறைந்து 999 ரூபாய்க்குக் கிடைக்கிறது.

ஃப்ளிப்கார்ட்டின் இன்றைய ஹைலைட் ஸ்மார்ட் டிவிகள்தாம். Mi டிவி முதல் தாம்சன் டிவி வரை நிறைய ஆஃபர்கள் கொட்டிக்கிடக்கின்றன.

Mi 32 இன்ச் - ₹ 13,499 (₹ 15,999 - சாதாரண விலை)

தாம்சன் 32 இன்ச் - ₹ 11,999 (₹ 16,999 )

Vu 32 இன்ச் - ₹ 9,999 (₹ 16,000 )

ஃப்ளிப்கார்ட்டின் இன்-ஹவுஸ் பிராண்டான MarQ ஸ்மார்ட் டிவி 32 இன்ச் - ₹ 9,499 (₹ 16,499 )

LG 32 இன்ச் - ₹ 19,999 (₹ 30,990)

சாம்சங் 32 இன்ச் - ₹ 15,999 (₹ 26,900)

ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே

43 இன்ச் டிவிகள்

Mi - ₹ 20,999 (₹ 25,999 )

Vu - ₹ 20,499 (₹ 30,000)

MarQ - ₹ 27,999 (₹ 42,999 )

LG - ₹ 39,999 (₹ 57,990)

இதேபோல மற்ற ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தாம்சன், MarQ, கோடக் பிராண்ட்களின் ஸ்மார்ட் டிவிகள் பலவும் 8,000 - 9,000 பட்ஜெட்டிலேயே கிடைக்கின்றன. 

மொபைல்கள்

சமீபத்தில் ஷியோமிக்கு பெரிய ஊக்கம் தந்த மொபைல்களுள் ஒன்று ரெட்மி நோட் 5 ப்ரோ. அதன் விலையை 2,000 ரூபாய் குறைத்திருக்கிறது ஷியோமி. 14,999 ரூபாய் விலைகொண்ட நோட் 5 ப்ரோ, 12,999 ரூபாய்க்குக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஷியோமிக்குப் போட்டியாக ஓப்போ நிறுவனம் கொண்டுவந்து ஹிட் அடித்த மொபைல் ரியல்மீ 2. இதன் விலையில் மாற்றங்கள் இல்லை. HDFC கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் 899 ரூபாய் சலுகை கிடைக்கும். இதன்மூலம் 8091 ரூபாய்க்கு இதனை வாங்கமுடியும். 

இதே நிறுவனத்திலிருந்து வந்து லேட்டஸ்ட்டாக வந்த மொபைல் ரியல்மீ 2 ப்ரோ. இதன் விலை (₹ 14,990) 1,000 ரூபாய் குறைக்கப்பட்டு 13,990 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. HDFC வங்கியின் கார்டுகள் இருந்தால் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். 

இதேபோல பிற நிறுவனங்களின் மொபைல் போன்களும் அதிரடியாக விலை குறைந்துள்ளன.

1. ஓப்போ F9 (4 GB / 64 GB) - ₹ 19,990 (₹ 21,990 பழைய விலை)

2. ஓப்போ F9 ப்ரோ (6 GB) - ₹ 23,990 (₹ 25,990 )

3. ரெட்மி 6 ( 3 GB / 32 GB) - ₹ 7,999 ( ₹ 8,999)

4. நோக்கியா 5.1 ப்ளஸ் ( 3 GB / 32 GB ) -  ₹ 10,449  ( ₹ 13,199)

5. நோக்கியா 6.1 ப்ளஸ் ( 4 GB / 64 GB) - ₹ 14,999 (₹ 17,600)

6. ஹானர் 9N ( 3 GB / 32 GB) - ₹ 9,999 (₹ 13,999 )

7. ஹானர் 9N ( 4 GB / 64 GB) - ₹ 11,999 (₹ 15,999)

இதுபோக சில மொபைல்கள் அதிகளவில் விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளன.

1. சாம்சங் கேலக்ஸி S8 - ₹ 29,990 ( ₹ 45,990)

2. சாம்சங் கேலக்ஸி oN 6 - ₹ 15,490 (₹ 11,990 )

3. லெனோவா K8 ப்ளஸ் - ₹ 6,999 (₹ 10,999)

இந்த மொபைல்களை தற்போது உடனே வாங்கிவிட முடியாது. இப்போதைக்கு இவற்றின் விலை மட்டும்தான் அறிவிக்கப்பட்டுள்ளன. விற்பனை இன்று இரவு 12 மணியிலிருந்து தொடங்குகிறது. டிவிகளை இப்போதே வாங்கலாம்.

பிக் பில்லியன் டே

அமேசான் கிரேட் இந்தியன் சேல்

ஃபிளிப்கார்ட்டைப் போலவே, அமேசானிலும் ஷியோமியின் ஆதிக்கம் அதிகம். மொபைல் மற்றும் ஸ்மார்ட் டிவி இரண்டிலும் நிறைய சலுகைகளைத் தந்திருக்கிறது. தன்னுடைய புதிய மாடல்களின் விற்பனையையும் இன்று தொடங்கியிருக்கிறது.

மொபைல்களின் சலுகை விலை

ரெட்மி Y2 ( 3 GB / 32 GB) - ₹ 8,999 ( ₹ 10,499)

ரெட்மி Y2 ( 4 GB / 64 GB) -  ₹ 10,999 ( ₹ 13,499)

ரெட்மி 6 ப்ரோ (32 GB) - ₹ 10,999 ( ₹ 11,999)

Mi A2 ( 4 GB / 64 GB) - ₹ 14,999 ( ₹ 17,499)

மோட்டோ G5 ப்ளஸ் ( 4 GB / 64 GB) -  ₹ 9,999 ( ₹ 16,999)

சாம்சங் கேலக்ஸி நோட் 8 -  ₹ 43,990 (₹ 76,690)

ரியல்மீ 1 - 6 GB + 128 GB - ₹ 12,990 ( ₹ 14,990)

ஒன்ப்ளஸ் 6 ( 8 GB / 128 GB) - ₹ 34,999 (₹ 39,999)

இதேபோல ஹார்டு டிஸ்க்களுக்கும் விலை குறைக்கப்பட்டுள்ளது. 2 TB ஹார்டு டிஸ்க்குகள் 5,000 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன. இங்க்ஜெட் பிரின்ட்டர்களின் விலையும் வெகுவாகக் குறைந்துள்ளன. HP, CANON ஆகிய நிறுவனங்களின் இங்க்ஜெட் பிரின்ட்டர்கள் 2,000 ரூபாயிலிருந்தே கிடைக்கின்றன.

அமேசான் தன்னுடைய அலெக்ஸா, கிண்டில் போன்றவற்றுக்கும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. எக்கோ டாட் 2nd Gen ஸ்மார்ட் ஸ்பீக்கர் 2,449 ரூபாய்க்குக் கிடைக்கிறது. 3rd Gen ஸ்மார்ட் ஸ்பீக்கர் 2,999 ரூபாய்க்குக் கிடைக்கிறது. அமேசான் எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர் 6,999 ரூபாய். இதன் உண்மை விலை ₹ 9,999. 2nd Gen எக்கோ ப்ளஸ் 11,999 ரூபாய். 

இவைதவிர இயர்போன்கள், ப்ளூடூத் ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட் டிவிகள் போன்றவற்றின் விலையும் அதிரடியாகக் குறைந்துள்ளன. இதுபோன்ற ஆஃபர் காலங்களில் கேட்ஜெட்கள் வாங்குவது ஒருவகையில் நல்லதுதான். எக்ஸ்சேஞ்ச், EMI, கிரெடிட் / டெபிட் கார்டு இன்ஸ்டன்ட் தள்ளுபடிகள், குறைவான விலை என நமக்கு நிறைய நல்லவிஷயங்கள் கிடைக்கும். ஆனால், விலை குறைவாகக் கிடைக்கும்போது நாம் செய்யும் தவறான விஷயங்களில் ஒன்று, அவற்றின் ரிவ்யூக்களைப் படிக்காமலே ஆர்டர் செய்வது. இதனால் மொபைல் வாங்கிய பின்பு பிடிக்காமல் போகலாம். எனவே எந்த மொபைலாக இருந்தாலும், அதன் விற்பனை எப்போது தொடங்குகிறது என்பதை முதலிலேயே பார்த்து வைத்துக்கொண்டால் அதற்கு முன்பே அதுபற்றித் தெரிந்து வைத்துக்கொள்ள முடியும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்