`பே டிஎம், ஸ்விக்கி ஆப்களுக்கு புதிய கட்டுப்பாடு!' - கூகுள் நடவடிக்கை | Google play store update its policies for apps

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (11/10/2018)

கடைசி தொடர்பு:20:08 (11/10/2018)

`பே டிஎம், ஸ்விக்கி ஆப்களுக்கு புதிய கட்டுப்பாடு!' - கூகுள் நடவடிக்கை

மீபத்தில்தான் சமூக வலைதளமான கூகுள் ப்ளஸின் கணக்குகளிலிருந்து தகவல்கள் கசிந்ததாக ஒப்புக்கொண்டது கூகுள். இதனால் இந்தத் தளத்தின் சேவைகளை நிறுத்தப்போவதாகவும் அறிவித்தது கூகுள். இதன் தொடர்ச்சியாகப் ப்ளே ஸ்டோர் பாலிசிகளிலும் மாற்றங்கள் கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளது. இந்த மாற்றங்களின் மூலம் முக்கியத் தகவல்கள் லீக் ஆவதை முடிந்தளவு தடுக்க முயற்சி செய்யுமாம்.

இன்று முதல் நமது எஸ்.எம்.எஸ் மற்றும் கான்டக்ட்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்த போன் கால், எஸ்.எம்.எஸ், கூகுள் அசிஸ்டன்ட் சம்பந்தப்பட்ட செயலிகளுக்குதான் அனுமதி தரப்படுமாம். இதுவரை பல்வேறு செயலிகள் இந்த அனுமதியை நம்மிடம் கேட்கும், கொடுக்கவில்லை என்றால் அந்தச் செயலியை நம்மால் பயன்படுத்த முடியாது.

கூகுள் ஆப்ஸ்

இந்தியாவில் பே டிஎம், புக் மை ஷோ, கோ ஐபிபோ, ஜியோ டிவி, ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற பல முன்னணி செயலிகள் இந்த அனுமதிகளை OTP என்றோ, வேறு ஒரு காரணம் கூறியோ பெறும்.

Android Developers blog தளத்தில் இதைத் தெரிவித்த கூகுள், ``கூகுள் ப்ளே ஸ்டோர், இனி அனுமதி கேட்கும் செயலிகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும். பயன்பாட்டாளர் செலக்ட் செய்துள்ள டிஃபால்ட் காலிங் மற்றும் மெசேஜ் செயலிகளுக்கு மட்டும்தான் இந்த அனுமதிகள் கொடுக்கப்படும்" என்றது. ட்ரு காலர் போன்ற செயலிகளுக்கும் இது பொருந்தும். ஜனவரி மாதத்துக்குள் இந்தப் பாலிசிகளுக்கு உடன்படாத செயலிகள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படுமாம். இதற்கு சரியான காரணங்கள் இருந்தால் மட்டும் விதிவிலக்குகளும் தரப்படுமாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close