வெளியிடப்பட்ட நேரம்: 11:56 (12/10/2018)

கடைசி தொடர்பு:11:56 (12/10/2018)

#TechTamizha: பட்ஜெட் போன்... மெகா ஸ்க்ரீன்... மெர்சல் கேமரா... எந்த ஐபோன் பெஸ்ட்?

ணக்கம் வாசகர்களே!

செப்டம்பர், அக்டோபர்... இந்த இரு மாதங்களும் டெக் ஆர்வலர்களுக்கான செய்திகளில் பஞ்சமே இருக்காது. ஒவ்வொரு வருடமும் இந்த சீசனில்தான் ஆப்பிள் ஐபோனை வெளியிடும். அதைத் தொடர்ந்து புதுப்புது கேட்ஜெட்கள், அப்டேட்கள் வெளிவரும். அடுத்து கூகுள் பிக்ஸல், ஒன்ப்ளஸ், புதிய பட்ஜெட் மொபைல்கள் எனத் தொடர்ந்து கேட்ஜெட்கள் வரிசைகட்டி வரும். இவற்றின் ரிவ்யூக்கள், இவற்றின் புதிய தொழில்நுட்பங்கள், விற்பனை என டெக் செய்திகள் அத்தனையும் இவற்றைச் சுற்றிதான் இருக்கும். இதில் எதுவும் இந்த அக்டோபரில் மாறிவிடவில்லை. அப்படியேதான் நடந்துகொண்டிருக்கின்றன.

பெரிய அப்டேட்கள் இல்லாதபோதும் வழக்கம்போல புதிய ஐபோன்கள் மூலம் கவனத்தை தன்பக்கம் ஈர்த்திருக்கிறது ஆப்பிள். இந்த வருடம் ECG-யுடன் வந்த ஆப்பிள் வாட்ச் சர்ப்ரைஸ். இவைகுறித்த விரிவான கட்டுரை இந்த மாத டெக் தமிழா இடம்பெற்றுள்ளது. இதுதவிர ஷேர்சாட் ஆப்பின் CBO பேட்டி, ஃபேஸ்புக்கின் புதிய ஹேக்கிங் பஞ்சாயத்து, Data Localisation குறித்த அறிமுகம், புதிதாக வந்திருக்கும் ரியல்மீ மொபைல்கள் குறித்த கட்டுரை போன்றவையும் இடம்பெற்றுள்ளன. 

டெக் தமிழா அக்டோபர் 2018 - ஐபோன் ஸ்பெஷல்

இதுவரைக்கும் டெக் தமிழாவை நேரடியாக லிங்க் மூலம் டிரைவிலிருந்து டவுன்லோடு செய்து படித்துவந்தீர்கள். ஆனால், இனிமேல் நேரடியாக விகடன் ஆப்பிலேயே படிக்கலாம். http://bit.ly/2NwiUv3 இந்த லிங்க்கை க்ளிக் செய்து முதலில் விகடன் ஆப்பை டவுன்லோடு செய்து, பின்னர் `Magazines' பகுதிக்குச் செல்லவும். அங்கே லேட்டஸ்ட் டெக் தமிழா இதழ் இடம்பெற்றிருக்கும். அதை க்ளிக் செய்து டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஒருமுறை டவுன்லோடு செய்துவிட்டால், பின்னர் இணைய இணைப்பு இல்லாதபோதும்கூட படித்துக்கொள்ளலாம். இதேபோல டெக் தமிழாவின் முந்தைய இதழ்களும் ஒரே இடத்தில் வரிசையாக இடம்பெற்றிருக்கும். அவற்றையும் டவுன்லோடு செய்து படித்துக்கொள்ளலாம். 

படித்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க