`இன்டர்நெட் சேவை முடங்கலாம்!' - சைபர் தாக்குதலைத் தடுக்க ஐ.சி.ஏ.என்.என் எடுக்கும் 48 மணி நேரம்! | Internet will be shut down for next 48 hours says report

வெளியிடப்பட்ட நேரம்: 13:26 (12/10/2018)

கடைசி தொடர்பு:13:26 (12/10/2018)

`இன்டர்நெட் சேவை முடங்கலாம்!' - சைபர் தாக்குதலைத் தடுக்க ஐ.சி.ஏ.என்.என் எடுக்கும் 48 மணி நேரம்!

லகம் முழுவதும் இருக்கும் இன்டர்நெட் பயனாளர்கள், அடுத்த 48 மணி நேரத்திற்கு இணைய சேவைகளைப் பயன்படுத்த முடியாமல் போக நேரிடும் என 'ரஷ்யா டுடே' செய்தி நிறுவனம் இன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

உலகம் முழுவதும் இயங்கிக்கொண்டிருக்கும் இணையத்தின் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காகவும், அவற்றைப் பராமரிப்பதற்காகவும் ICANN (Internet Corporation of Assigned Names and Numbers) என்ற அமைப்பு இயங்கிவருகிறது. இணையதளங்களின் பெயர்கள், கணினிகளின் IP முகவரிகள் போன்றவற்றை இந்த அமைப்புதான் நிர்வகித்துவருகிறது. தற்போது, ICANN இணையத்தின் DNS சிஸ்டத்தின் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக, அடுத்த 48 மணி நேரத்துக்கு சில மாற்றங்களைச் செய்ய உள்ளது. குறிப்பாக, சைபர் தாக்குதல்களைத் தடுப்பதற்காக கிரிப்டோ கீ-க்களை மாற்றியமைக்கவிருக்கிறது. இந்த நேரத்தில், இணையத்தின் பெரும்பாலான சர்வர்களில் இந்தப் பணி நடக்கும் என்பதால், உலகம் முழுவதும் இருக்கும் இன்டர்நெட் பயனாளர்கள், அடுத்த 48 மணி நேரத்திற்கு இணையதளங்களைப் பார்வையிடுவதிலோ அல்லது இணையப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கோ சிக்கல் ஏற்படலாம். 

இன்டர்நெட்

இந்தப் பிரச்னை உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் ஏற்படாது. பராமரிப்புப் பணிகளைப் பொறுத்து சில குறிப்பிட்ட நாடுகள், இணையதளங்கள் அல்லது சேவைகளில் மட்டும் சிக்கல் ஏற்படும். மொத்தத்தில் இது உலகம் முழுவதும் 1 சதம் பயனாளர்களை மட்டுமே முழுமையாகப் பாதிக்கும். பிறருக்கு, சில சேவைகளில் மட்டும் தொய்வு ஏற்படலாம். மொத்த பராமரிப்புப் பணிகளும் முடிந்துவிட்டால் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவிடும். மேலும், இந்த மாற்றத்திற்குப் பெரும்பாலான இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்கள் தயாராகிவிட்டன. ஒருவேளை 48 மணி நேரத்திற்குப் பின்னும் பிரச்னை தொடர்ந்தால், அது இன்டர்நெட் சேவை நிறுவனங்களின் DNS சிஸ்டத்தில் இருக்கும் சிக்கலாக இருக்கலாம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close