3 மாதம் நெட்ஃப்ளிக்ஸ் இலவசம்... ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு புது சலுகை! #AirtelThanks | Airtel announced unveils new offers to their customers

வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (12/10/2018)

கடைசி தொடர்பு:21:10 (12/10/2018)

3 மாதம் நெட்ஃப்ளிக்ஸ் இலவசம்... ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு புது சலுகை! #AirtelThanks

#AirtelThanks என்னும் புதிய திட்டத்தின்கீழ் தன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புது சலுகைகளை அறிவித்திருக்கிறது ஏர்டெல் நிறுவனம். இதன்படி மாதம் 100 ரூபாய்க்கு மேல் ARPU ( Average Revenue Per User) வைத்திருக்கும் பயனாளிகள் கூடுதல் சலுகைகளைப் பெறுவார்கள். 

ஏர்டெல் நிறுவனத்தின் புதிய சலுகைகள்

499 ரூபாய்க்கு மேலான போஸ்ட்பெய்டு பிளான்களை வைத்திருப்பவர்களுக்கு 1,500 ரூபாய் மதிப்புள்ள நெட்ஃப்ளிக்ஸ் சேவை இலவசமாகக் கிடைக்கும். இது மூன்று மாதத்துக்கான சந்தா. ஏற்கெனவே நெட்ஃப்ளிக்ஸ் கணக்கு வைத்திருப்பவர்களும் இந்த சலுகையைப் பெறமுடியும். மாதத்துக்கு 199 ரூபாய்க்கு மேல் செலவிடும் போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ZEE5-ன் ப்ரீமியம் சேவைகளைப் பார்ப்பதற்கான அனுமதி வழங்கப்படும். இதை ஏர்டெல் டிவி ஆப் மூலம் மட்டுமே பார்க்கமுடியும். இதேபோல ஃப்ளிப்கார்ட் எக்ஸ்க்ளூசிவ் மொபைல் போன் வாங்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 100 GB இலவச டேட்டா கிடைக்கும்.

இந்தச் சலுகைகளை மை ஏர்டெல் மற்றும் ஏர்டெல் டிவி ஆகிய ஆப்களில் இருக்கும் #AirtelThanks என்ற பகுதிக்குச் சென்று பெறமுடியும்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close