வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (15/10/2018)

கடைசி தொடர்பு:16:10 (15/10/2018)

`அனுப்பிய மெசேஜை unsend செய்து கொள்ளலாம்!’ - ஃபேஸ்புக்கின் புது அப்டேட்

ஜேன் மஞ்சுண் வோங் என்ற டெக்ரான்ச் நிபுணர், ஏற்கெனவே ஃபேஸ்புக் தளத்தில் வரவிருக்கும் புதிய மாற்றங்களைப் பற்றிக் கண்டறிந்து சொன்னவர். அவர் சமீபத்தில் கண்டறிந்த ஒரு மாற்றம் வரவிருப்பது உறுதி என ஃபேஸ்புக்கும் உறுதி செய்துள்ளது.

பேஸ்புக்

இணையப் பயன்பாட்டாளர்கள், இதுவரை தாங்கள் ஃபேஸ்புக் வழியே அனுப்பிய குறுஞ்செய்திகளை அழிக்கச் (unsend ) செய்யும் வசதி இல்லாமல் இருந்தது. ஆனால், சமீபத்தில் ஜேன் மஞ்சுண் வோங், ஃபேஸ்புக் தளத்தில் தங்கள் குறுஞ்செய்திகளை அனுப்பிவிட்டு, திரும்பப் பெற நினைத்தால் எடிட் (edit) பக்கத்தில் unsend செய்யும் வசதியும் சேர்க்கப்பட்டிருப்பது போல ஒரு படத்தை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் தளத்தில், இந்தப் புதிய மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

                                                            பேஸ்புக் மெசேஜ்

ஏற்கெனவே ஃபேஸ்புக்கின் நிறுவனர்களில் ஒருவரான மார்க் சக்கர்பெர்க், அவர் அனுப்பிய செய்திகளை டெலீட் செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விரைவில் ஒருவர் தான் அனுப்பிய செய்தியை அவரே Unsend செய்யும் வசதியோடு புதிய மாற்றம் வரும்'' என்று அறிவித்துள்ளது.

இதனால் நீங்கள் தவறுதலாக அனுப்பிய குறுஞ்செய்திகளை, அடுத்தவர் பார்க்கும் முன்னர் அழித்து விடலாம். எனினும் ஒருவர் செய்தி அனுப்பிய சில நிமிடங்களுக்குள் மட்டுமே இந்த unsend செய்யும் வசதியைப் பயன்படுத்தமுடியும் என்றும் ஜேன் கணித்துள்ளார்.