ஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்! #GPlayed | New Android trojan GPlayed may attack your phone

வெளியிடப்பட்ட நேரம்: 15:48 (15/10/2018)

கடைசி தொடர்பு:15:48 (15/10/2018)

ஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்! #GPlayed

ண்ட்ராய்டு மொபைல்களை அச்சுறுத்தும் விதமாக, புதிய மால்வேர் ஒன்று கூகுள் பெயரிலேயே உருவாகியிருப்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது. இதன் ஐகான் மற்றும் பெயர் இரண்டும், கிட்டத்தட்ட கூகுள் ப்ளே ஸ்டோரை அப்படியே ஒத்திருக்கும். இந்தச் செய்தியை talos intelligence என்னும் வலைப்பூ உறுதிசெய்துள்ளது. 

ஆண்ட்ராய்டு பயனர்களை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்

Photo: talosintelligence

GPlayed எனப்படும் இந்த ட்ரோஜனின் பெயர், ஆண்ட்ராய்டில் Google Play Marketplace என்பதாகும். பார்க்க உண்மையான ப்ளேஸ்டோர் போலவே தோற்றமளிக்கும் இது, மொபைலுக்குள் புகுந்துவிட்டால் எளிதில் நம் தகவல்களைத் திருடிவிடும். இவற்றால் மொபைலின் பேக்கிரவுண்டில் அமைதியாக இயங்கவும், புதிய Plug-in-களை மொபைலில் இன்ஸ்டால் செய்யவும், .Net புரோகிராம்களை ரன் செய்யவும் முடியும். நம் மொபைலின் கான்டக்ட், மெசேஜ், லொக்கேஷன், பாஸ்வேர்டுகள் போன்றவற்றை இதனால் எளிதில் திருடிவிட முடியும். நம்முடைய வங்கிக்கணக்கு விவரங்கள், கிரெடிட் / டெபிட் கார்டு விவரங்களும் இவற்றில் அடக்கம். இப்போதைக்கு இந்த ட்ரோஜன் வெறும் சோதனை நிலையில் மட்டுமே இருக்கிறதாம். இது, ரஷ்ய ஹேக்கர்களின் கைவரிசையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

இதுபோன்ற மால்வேர்களிடம் இருந்து உஷாராக இருப்பது மிகவும் எளிது. பிரவுசர்கள், சமூக வலைதளங்களில் பரவும் போலியான ஆப் லிங்க்குகளை டவுண்லோடு செய்வதை நிறுத்தினாலே, இவற்றைப் பெருமளவு தடுத்திட முடியும். தேவைப்படும் ஆப்களை கூகுள் ப்ளே ஸ்டோரில் மட்டுமே டவுண்லோடு செய்ய வேண்டும். பிற யூசர்களிடம் இருந்து வாங்கும் ஆப்களையும் முறையாக ஸ்கேன் செய்தபின்பே பயன்படுத்த வேண்டும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க