``இந்தக் கம்பெனி இப்படித்தான்..!" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்    | This company is run having employee's opinions in mind

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (16/10/2018)

கடைசி தொடர்பு:21:40 (16/10/2018)

``இந்தக் கம்பெனி இப்படித்தான்..!" - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை திட்டவட்டம்   

இந்த வருடத்தின் தொடக்கத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூகுள் ஊழியர்கள் அமெரிக்காவின் உயர் தொழில்நுட்ப ராணுவ ஆராய்ச்சி ஒன்றில் தங்களது நிறுவனம் பங்குபெறுவதை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தினால், கூகுள் நிறுவனத்துக்குப் பெரிய அளவில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என அந்நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, சமீபத்தில் நடந்த தனியார் பத்திரிகையின் 25-வது ஆண்டு விழா ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சுந்தர் பிச்சை

பென்டகன் எனப்படும் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையின் கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கான டெண்டரில், கூகுள் கலந்துகொள்ளாததற்கு முன்பு நடந்த இப்போராட்டங்கள்தான் காரணமா? எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, இப்படிப் பதிலளித்தார் சுந்தர் பிச்சை.

கூகுள் தொடங்கிய காலம் முதல் ஊழியர்களுக்கு நிர்வாகத்திடம் கோரிக்கைகள் வைப்பதற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டே வருவதாகவும், இருப்பினும், ஊழியர்களின் கருத்தை மட்டுமே வைத்து நிர்வாகம் நடத்தும் ஜனநாயக முறை இங்கு கிடையாதென்றும் அவர் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாகப் பயன்படுத்தும் ஆபத்து இருப்பதாகத்தான் இந்தப் போராட்டங்கள் வெடித்தன. சில ஊழியர்கள் வேலையை ராஜினாமாசெய்தனர். மற்றும் சிலர், இதைப் பற்றி ஊடகவியலாளர்களுக்கு முக்கியத் தகவல்களை லீக் செய்தனர். 4,000 ஊழியர்கள் இதற்கு எதிராக பெட்டிஷனில் கையெழுத்திட்டனர்.

இந்தப் போராட்டங்களுக்குப் பிறகு, செயற்கை நுண்ணறிவு பற்றிய ஒப்பந்தங்கள் இருதரப்பின் நடுவம் போடப்பட்டன. இதில், ராணுவம் எக்காரணத்திற்கும் இதைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டது. எதிர்ப்புகள் இருப்பினும், அமெரிக்க ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறையுடனும் தொடர்ந்து பணிபுரியவே கூகுள் விரும்புவதாகத் தெரிவித்தார். 

மீண்டும் சீனாவுக்குத் தங்களது சர்ச் என்ஜினைக் கொண்டுசெல்வது என கூகுளின் மற்ற வருங்காலத் திட்டங்கள் பற்றியும் அவர் இந்த விழாவில் பேசியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க