வெளியிடப்பட்ட நேரம்: 02:45 (17/10/2018)

கடைசி தொடர்பு:07:55 (17/10/2018)

ட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக தனி டேட்டிங் ஆப்... முதல் நாளிலேயே யூசர்களுக்கு நேர்ந்த சோகம்!

னிநபர் ஒருவரின் அரசியல் நிலைப்பாடு அவர் மீது எப்படிப்பட்ட பிம்பத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த ஆப்பே ஓர் உதாரணம். 2016-ல் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ச்சியாக ஊடகங்களிலும், சோஷியல் மீடியாக்களிலும் ட்ரோல் செய்யப்படுபவர் டொனால்ட் ட்ரம்ப். இவரோடு சேர்த்து இவருடைய ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டனர். ஃபேஸ்புக், ட்விட்டர் என எங்கு சென்றாலும் டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள் என்றாலே பிறர் கிண்டல் செய்வதும், வெறுப்பதுமாகவே இருந்தனர். இதற்குத் தீர்வுகாண வேண்டும் என நினைத்த எமிலி மொரினோ, ட்ரம்ப்பின் ஆதரவாளர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக டேட்டிங் ஆப் ஒன்றை நேற்று தொடங்கினார். இதன் பெயர் டொனால்ட் டேட்டர்ஸ்.

டொனால்ட் டேட்டர்ஸ் டேட்டிங் ஆப்

``பிறருக்காக உங்கள் அரசியல் நிலைப்பாட்டை மறைக்கவோ, மாற்றிக்கொள்ளவோ வேண்டாம். ட்ரம்ப்பின் ஆதரவாளராகவே இருங்கள்; உங்கள் கருத்தோடு ஒத்த நண்பர்களையும் கண்டறிந்துகொள்ளுங்கள்" என்பதுதான் இந்த ஆப்பின் சாராம்சம். ட்ரம்ப்பின் அரசியல் கோஷமான 'Make America Great Again' என்பதுபோல, 'Make America Date Again' என்பதுதான் இதன் கோஷமே! இப்படி ட்ரம்ப்பின் தொண்டர்கள் டேட் செய்ய வேண்டும் எனத் தொடங்கப்பட்ட இந்த ஆப் மீது, யார் கண் பட்டதோ தெரியவில்லை; முதல்நாளே பயனர்களின் டேட்டா பலவும் லீக் ஆகிவிட்டன. சுமார் 1,600 பேர் இந்த ஆப்பை முதல்நாளில் பயன்படுத்தியிருக்கின்றனர். இவர்களின் விவரங்கள் அனைத்தையும் பிரபல ஹேக்கரான எலியட் மிக எளிதில் பெற்றிருக்கிறார். இதை எலியட், ஆப் நிறுவனத்துடன் ட்விட்டரில் தெரிவிக்கவே உடனடியாக பாதுகாப்புக் குறைபாடு கண்டறியப்பட்டுச் சரிசெய்யப்பட்டுவிட்டது. 

இந்த ஆப்பில் இரண்டு நபர்கள் சாட் செய்வதற்கான வசதியை தேர்ட் பார்ட்டி நிறுவனத்திடமிருந்து டொனால்ட் டேட்டர்ஸ் பெற்றிருக்கிறது. அதில் இருந்த பாதுகாப்பு குறைபாடுகள் பயனர்களின் டேட்டாவை லீக் செய்திருக்கிறது. இந்தப் பிரச்னை தெரியவந்ததும், தற்காலிகமாக ஆப்பில் சாட் வசதியை நிறுத்தி வைத்திருக்கிறது இந்நிறுவனம். 

இந்தியாவில் இப்படி ஒரு ஆப் தொடங்கினால் எந்தத் தலைவருக்கு தொடங்கலாம்? 

நீங்க எப்படி பீல் பண்றீங்க