அடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர் | Winamp music player is will be coming back in 2019

வெளியிடப்பட்ட நேரம்: 04:17 (17/10/2018)

கடைசி தொடர்பு:07:58 (17/10/2018)

அடுத்த வருஷம் வர்றோம் கலக்குறோம்.. மீண்டும் களமிறங்கும் 90 ஸ் நாஸ்டால்ஜியா Winamp ப்ளேயர்

Winamp

இது நிச்சயமாக 90 ஸ் நாஸ்டால்ஜியா காலம்தான் போல. 90 களை நினைவுபடுத்தும் விதமாகப் பல விஷயங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. டெக் உலகைப் பொறுத்தவரையில் நோக்கியா திரும்பி வந்ததை அப்படி வைத்துக்கொள்ளலாம். அதேபோல தற்பொழுது மற்றொரு நாஸ்டால்ஜிக் விஷயம் ஒன்றும் திரும்பி வரப்போகிறது. பல வருடங்களுக்கு முன்னால் கம்ப்யூட்டரில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்த Winamp மீடியா பிளேயர்தான் அது. பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்னால் யாராவது கம்ப்யூட்டரில் பாடல்கள் கேட்டிருந்தால் Winamp ப்ளேயரை அவர்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும்.

 ப்ளேயர்

1997-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இது காலப்போக்கில் மறைந்து போனது. கடைசியாக 2013-ம் ஆண்டில் இதற்கான அப்டேட் இறுதியாக வழங்கப்பட்டது. அதன் பின்னரும் தற்பொழுது வரை இது சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.100 மில்லியன் பேர் தற்பொழுது பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், அடுத்த வருடம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கான Winamp ப்ளேயர் அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவலை வெளியிட்டிருக்கிறது டெக்ரஞ்ச் இணையதளம். கடந்த 2014-ம் ஆண்டில் Radionomy என்ற நிறுவனம் Winamp ப்ளேயரை விலைக்கு வாங்கியது. அதை மீண்டும் சந்தையில் அறிமுகப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் Winamp ப்ளேயருக்கும் அடுத்த வருடம் முதல் அப்டேட்கள் தரப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.