ஷியோமி போன் வாங்கப் போறீங்களா... அப்டினா இந்த ஆஃபர் உங்களுக்குத்தான்! | Xiaomi smartphones available discounted price in offline stores

வெளியிடப்பட்ட நேரம்: 03:15 (20/10/2018)

கடைசி தொடர்பு:07:05 (20/10/2018)

ஷியோமி போன் வாங்கப் போறீங்களா... அப்டினா இந்த ஆஃபர் உங்களுக்குத்தான்!

ஷியோமி

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதால் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கு பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றன. ஏற்கெனவே ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்றவை கடந்த சில நாள்களுக்கு முன்னால்தான் சிறப்பு விற்பனையை நடத்தி முடித்தன. அத்துடன் முடிக்காமல் அடுத்த வாரமும் சிறப்பு விற்பனையை நடத்துவதற்கு முடிவு செய்திருக்கின்றன. தற்பொழுது அந்த வரிசையில் ஷியோமி நிறுவனமும் இணைந்திருக்கிறது. ஏற்கெனவே கடந்த சில நாள்களாக ஷியோமியின் ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டே விற்பனை செய்யப்பட்டன. அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சலுகையை மேலும் சில நாள்களுக்கு நீட்டிக்க முடிவு செய்திருக்கிறது ஷியோமி.

ஸ்மார்ட்போன்

அதன்படி Mi A2 ஸ்மார்ட்போன் 14,999 ரூபாய், Redmi Note 5 Pro ஸ்மார்ட்போன் (4GB RAM + 64GB இன்டெர்னல் மெமரி மாடல் 12,999 ரூபாய், 6GB RAM + 64GB இன்டெர்னல் மெமரி மாடல் 14,999 ரூபாய்), Mi Mix 2 ஸ்மார்ட்போன் 26,999 ரூபாய், Redmi Y2 ஸ்மார்ட்போன் 10,999 ரூபாய் என்ற விலையில் கிடைக்கும். அடுத்த மாதம் 7-ம் தேதி வரை Mi ஹோம் மற்றும் ஷியோமியால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டோர்களில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும். இது தவிர SBI கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 500 ரூபாய் கேஷ்பேக்கும் உண்டு. அதே நேரத்தில் இந்தச் சலுகை ஆன்லைனில் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்குப் பொருந்தாது.