கிரெடிட் கார்டு அளவில் உலகின் மிகச்சிறிய ஸ்மார்ட் போன்! - ஜப்பான் கண்டுபிடிப்பு | a credit card sized phone introduced in japan

வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (20/10/2018)

கடைசி தொடர்பு:12:45 (20/10/2018)

கிரெடிட் கார்டு அளவில் உலகின் மிகச்சிறிய ஸ்மார்ட் போன்! - ஜப்பான் கண்டுபிடிப்பு

உலகின் ஸ்மார்ட் போன் சந்தையில் முதலிடத்தில் இருக்கும் ஆப்பிள், சாம்சங் ஆகிய நிறுவனங்கள், தங்களுடைய செல்போன் மாடல்களைப் பெரியதாகிக் கொண்டே செல்லும்போது, அதற்கு முற்றிலும் மாறாகச் சிந்தித்து உலகின் மிகச்சிறிய செல்போன் கண்டுபிடித்திருக்கிறது ஜப்பான் நிறுவனமான க்யோஸ்ரா (kyocera). ஒருவர் மொபைல் போனை மற்றவரிடம் பேசுவதற்கு மட்டும் பயன்படுத்தினால் போதும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட இந்தச் சிறிய போன்கள், உங்கள் பர்சில் கிரெடிட் கார்டு வைக்கும் இடத்தில் பொருந்திப்போகும்.

ஸ்மார்ட் போன்

ஆண்ட்ராய்டு, ஆப் ஸ்டோர், கேமரா போன்ற எந்த வசதிகளும் இந்த போனில் இல்லை. மாறாக இணையத்தில் தகவல் தேடும் வசதி, கால்குலேட்டர், காலண்டர் இவை மட்டுமே உண்டு. இதன் பேட்டரி அளவும் 380mAh  தான் இருக்கும் என்கின்றனர். ஆனால், இதன் பயன்பாடும் மிகக் குறைவு என்பதால், பிரச்னை இல்லை என்கின்றனர் விவரம் அறிந்தோர். சில நாள்களுக்கு முன்னர் பாம் (palm) நிறுவனம் எல்லா வசதிகளும் கொண்ட உலகின் மிகச்சிறிய மொபைல்போன் உருவாக்கத் திட்டமிட்டிருந்தது. ஆனால், அதை விடவும் மெலிதாக இருக்குமாம் இந்த புதிய க்யோஸ்ரா (kyocera) போன் ரகம்.

 போன்

ஆண்ட்ராய்டு போன்களால் ஏற்படும் பாதிப்புகளை ஒரு பக்கம் பட்டியலிட்டுக்கொண்டே இருக்கின்றனர் பலர். இந்த நிலையில், மீண்டும் அலைபேசி என்பது ஒருவரைத் தொடர்புகொள்ள மட்டும் இருந்தால் போதும் என்று மக்கள் நினைக்கத் தொடங்கலாம். அப்போது இந்த மாதிரி போன்கள் தான் நமக்குத் தேவைப்படும். எனினும்  முதற்கட்டமாக இந்த போன் ஜப்பானில்தான் அறிமுகமாகிறது. இந்திய மார்க்கெட்டுக்கு இந்த போன் வர சில வருடங்கள் ஆகலாம்.