வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (22/10/2018)

கடைசி தொடர்பு:08:16 (22/10/2018)

அடுத்த மாதம் வெளியாகிறதா 'ரெட்மி நோட் 6' ஸ்மார்ட்போன் ?

ரெட்மி நோட் 6 புரோ

ஷியோமி நிறுவனம், அடுத்த மாதம் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் அனைத்துமே, இந்தியச் சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகின்றன. குறிப்பாக, ரெட்மி நோட் சீரிஸ் போன்கள் அதிகம் விற்பனையாகும் மொபைல்களில் ஒன்றாக இருக்கிறது. 'ரெட்மி நோட் 5' ஸ்மார்ட்போன் இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அதுவே விற்பனையில் இருக்கிறது. இந்நிலையில், அதற்கடுத்ததாக 'ரெட்மி நோட் 6 புரோ' ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் தொடக்கத்திலோ அல்லது மத்தியிலோ அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

ஸ்மார்ட்போன்

அந்த ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்ச்சிக்காக ஊடகங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பு தொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியிருக்கிறது. அதன் மூலமாக, புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கடந்த மாதம் தாய்லாந்தில் ரெட்மி நோட் 6 புரோ-வை ஷியோமி நிறுவனம் அறிமுகப்படுத்திவிட்டது. ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும் போது, டிஸ்ப்ளேவில் நாட்ச் மற்றும் டூயல் முன்புற கேமராக்கள் ஆகியவை முற்றிலும் புதிய வசதிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளன.