வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (23/10/2018)

கடைசி தொடர்பு:07:30 (23/10/2018)

வந்துவிட்டது Floating கீ-போர்டு... கூகுள் கீ-போர்டின் புதிய ஆப்ஷன்!

பெரும்பாலானோர் தங்கள் ஆண்ட்ராய்டு மொபைல்களில் பயன்படுத்தும் கீ-போர்டுகளில் ஒன்று கூகுளின் G-board. தற்போது இதன் அப்டேட்டட் வெர்ஷனை வெளியிட்டிருக்கும் கூகுள் புதிதாக Floating Keyboard எனப்படும் வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. இதன்மூலம் மொபைலின் கீழ்ப்பகுதியில் மட்டுமே இருக்கும் கீ-போர்டை நம் வசதிக்கேற்ப திரையில் இடம்மாற்றிக்கொள்ளலாம். 

கீ- போர்டு

இந்த வசதியைப் பெற அப்டேட்டான  GBoard 7.6 வெர்ஷன் இருக்க வேண்டும். பின்னர் கீ-போர்டு தேவைப்படும் இடத்தில் அதை ஓப்பன் செய்து, GBoard-ன் ஓரத்தில் இருக்கும் G என்ற ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். இப்போது மூன்று புள்ளிகள் கொண்ட மெனு இருக்கும். அதைக் க்ளிக் செய்தால் புதிதாக Floating என்ற ஆப்ஷன் தென்படும். அதைக் க்ளிக் செய்தால் போதும். புதிய Floating கீ-போர்டு வந்துவிடும். இதன் அளவையும் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். மீண்டும் பழைய நிலைக்கே திரும்ப வேண்டுமென்றால், மீண்டும் G ஐகானை க்ளிக் செய்து மாற்றிக்கொள்ளலாம். இதேபோல GBoard-ல் ஹாலோவின் GIFகளையும் கூகுள் விரைவில் சேர்க்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க