'முதல்ல தகவல் பாதுகாப்ப ஒழுங்குப்படுத்துங்கய்யா'- ஃபேஸ்புக்கை எச்சரித்த ஜப்பான்  | Japan warns Facebook to have better data protection

வெளியிடப்பட்ட நேரம்: 04:15 (23/10/2018)

கடைசி தொடர்பு:07:41 (23/10/2018)

'முதல்ல தகவல் பாதுகாப்ப ஒழுங்குப்படுத்துங்கய்யா'- ஃபேஸ்புக்கை எச்சரித்த ஜப்பான் 

உடனடியாக பயன்பாட்டாளர்களின் தகவல்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது ஜப்பான் அரசு. கடந்த சில மாதங்களாகவே இது பாதுகாப்பான தளம் அல்ல என பல சர்ச்சைகள் மூலம் தெரியவந்துகொண்டே இருக்கின்றன. சமீபத்தில் கூட சுமார் 5 கோடி பயன்பாட்டாளர்களின் தகவல்கள் ஹேக்கர்களால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஒப்புக்கொண்டது ஃபேஸ்புக்.

பேஸ்புக்

ஜப்பானின் Personal Information Protection Commission ஏன் இப்படி நடந்தது, வருங்காலத்தில் இது நடக்காமல் தடுக்க என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என ஃபேஸ்புக்கிடம் கேள்விகள் எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக ஜப்பான் அரசு அதிகாரிகள் பேசுவகையில் பாதிக்கப்பட்ட கணக்குகளில் ஜப்பான் மக்களின் கணக்கும் அடங்கும் அது குறைந்தபட்சம் 1 லட்சம் கணக்குகளாவது இருக்கும் என்று தெரிவித்தனர். 

ஜப்பான் உத்தரவுக்கு அடிபணிந்த ஃபேஸ்புக் இனி இது நடக்காமல் இருக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன என்றும் மேலும், தவறாக தகவல்கள் திருடப்பட்டால் பாதிக்கப்பட்ட பயன்பாட்டாளரிடம் நேரடியாகத் தெரிவிக்கப்படும் என்றும் அந்த கமிஷனுடன் ஒத்துழைப்பு அளிப்போம் என்றும் வாக்குறுதி அளித்தனர். 

அமெரிக்கா தேர்தலின்போது இப்படிதான் பயன்பாட்டாளர்கள் தகவல்கள் திருடப்பட்டு ட்ரம்ப் ஆதரவாளர்களால் பயன்படுத்தப்பட்டது என்று குற்றம்சாட்டப்பட்டு  வழக்குகளைச் சந்தித்தது ஃபேஸ்புக். இந்திய தேர்தலிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்துவிடக்கூடாதென  எச்சரிக்கையாக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க