புது வசதிகள், ப்ரீ புக்கிங், கேஷ்பேக் ஆஃபர்... ஒன்ப்ளஸ் 6T அப்டேட்ஸ்! #OnePlus6T | New features, pre booking, cashback offer - all you need to know about oneplus 6T

வெளியிடப்பட்ட நேரம்: 09:28 (23/10/2018)

கடைசி தொடர்பு:13:09 (23/10/2018)

புது வசதிகள், ப்ரீ புக்கிங், கேஷ்பேக் ஆஃபர்... ஒன்ப்ளஸ் 6T அப்டேட்ஸ்! #OnePlus6T

புது வசதிகள், ப்ரீ புக்கிங், கேஷ்பேக் ஆஃபர்... ஒன்ப்ளஸ் 6T அப்டேட்ஸ்! #OnePlus6T

ப்பிள் சாம்சங் போன்ற நிறுவன மொபைல்களுக்கு இருந்த வரவேற்பு, சில வருடங்களாக ஒன்ப்ளஸ் என்னும் சீன நிறுவனத்துக்கும் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. விவோ, ஒப்போ, ஒன்ப்ளஸ், ரியல்மீ எல்லாம் ஒரு குடையின் கீழ் இயங்கும் வெவ்வேறு நிறுவனங்கள். பிற மொபைல்கள் எல்லாம் விளம்பரங்களில் அதிகக் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, ஒன்ப்ளஸ் மொபைல் முதலில் இருந்தே நெவர் செட்டில், FLAGSHIP KILLER போன்ற அடைமொழிகளுடன் ஹிட் அடித்து வந்தது. சரி, மேட்டருக்கு வருவோம். 

இந்த மாத இறுதியில் (அக்டோபர் 30) உலகெங்கும் தன் அடுத்த மொபைலான ஒன்ப்ளஸ் 6T-ஐ அறிமுகப்படுத்த இருந்தது அந்நிறுவனம். ஆனால், ஆப்பிளின் டிம் குக் அதே தேதியில் ஆப்பிளின் ஐபேடை அறிமுகப்படுத்துவதாக சில நாள்கள் முன்பு அறிவிக்க, ஒன்ப்ளஸ் தற்போது, ஒரு நாளைக்கு முன்பாகவே அறிமுகம் ஆக இருக்கிறது. இப்படியாக, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வரும் 29-ம் தேதியே அறிமுகம் ஆகவிருக்கிறது ஒன்ப்ளஸ் 6T. 

இந்தியாவில் 30-ம் தேதி இரவு 8.30 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அறிமுகம் எந்த தேதியில் இருந்தால் என்ன என்பது போலத்தான் இருக்கிறார்கள் ஒன்ப்ளஸ் ரசிகர்கள். காரணம், மொபைலில் இருக்கும் பெரும்பாலான விஷயங்கள் ஏற்கெனவே லீக் ஆகிவிட்டன. ஒன் ப்ளஸ் 6க்கு The Speed You Need என விளம்பரம் செய்தவர்கள், இந்தமுறை Unlock The Speed என விளம்பரப்படுத்தி வருகிறார்கள். ஒன்ப்ளஸ் 6-க்கும், 6T-க்கும் இருக்கும் முக்கியமான வித்தியாசங்கள் என்னென்ன? இதோ. 

டியூ டிராப் டிசைன் 

மொபைலின் முன்பக்கத்தில் இருக்கும் திரையின் அளவை அதிகரிக்க ஒவ்வொரு மொபைல் நிறுவனமும் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு பல மொபைல்கள் நாட்ச் டிசைனுக்கு மாறின. ஒன் பிளஸ் 6ல்கூட நாட்ச் டிசைன் தான். ஒப்போ FIND X, VIVO நெக்ஸ், ரியல் மீ 2 ப்ரோ போன்ற மொபைல்கள் அடுத்த கட்டமான டியூ டிராப் டிசைனுக்கு அப்டேட் ஆகி இருக்கிறார்கள். ஒன்ப்ளஸ்ஸும் இதைப் பின்பற்ற இருக்கிறது. 6.4 " AMOLED டிஸ்ப்ளேவில் ஃபிரன்ட் கேமராவுக்கான இடம் போக, மற்ற அனைத்துமே திரைக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. 

In-screen ஃபிங்கர்பிரின்ட் சென்சார்

ஸ்கிரீனிலேயே ஃபிங்கர்பிரின்ட் சென்சார் என்னும் வசதியை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது விவோதான். ஆனாலும், நேரடியான ஃபிங்கர் பிரின்ட் அளவுக்கு , இதில் துல்லியம் இல்லை என்பதுதான் அந்த மொபைலை உபயோகித்தவர்களின் கருத்தாக இருக்கிறது. ஒன்ப்ளஸ் எந்த அளவுக்கு சிரத்தை எடுத்து இதைச் சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள் என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும், 

ஒன்ப்ளஸ் 6T-யின் இன்ஸ்க்ரீன் ஃபிங்கர்பிரின்ட் சென்சார்

ஹெட்ஃபோன் ஜாக் இல்லை 

ஆப்பிளும் கூகுள் பிக்ஸலும் தத்தமது மொபைல்களில் இருந்து ஹெட்ஃபோன் ஜாக்கை அகற்றி இருந்தாலும், பிற நிறுவனங்கள் அதற்குத் தயாராகவில்லை. ஒன்ப்ளஸ்ஸும் ஒவ்வொரு முறையும், அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் ஹெட் ஃபோன் ஜாக் குறித்த போலிங் ஒன்றை நடத்தும். ஒவ்வொரு முறை இந்த போலிங் நடக்கும்போதும், ஹெட் ஃபோன் ஜாக் தேவை என்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருந்தது. ஆனால், அது சதவிகித அடிப்படையில் குறைந்துகொண்டே வந்தது. ஒன்ப்ளஸ் 6 மொபைல் வெளியானபோது, ஒயர்லெஸ் ஹெட்செட்களை அறிமுகம் செய்த ஒன்ப்ளஸ் இந்த முறை ஹெட்ஃபோன் ஜாக்கை நீக்கியிருக்கிறது. ஆக, இனி ஐஃபோன் X மொபைலைப் போல், ஒன்ப்ளஸ் 6T மொபைலிலும் சார்ஜிங் போர்ட்டிலேயேதான் ஹெட்செட்டைப் பயன்படுத்த முடியும். ஒரே நேரத்தில் சார்ஜ் போட்டுக்கொண்டு, ஒயர்டு ஹெட்செட்டைப் பயன்படுத்த முடியாது. 

அதிக பேட்டரி திறன்

ஹெட்ஃபோன் ஜாக்கை அகற்றிவிட்டதால், அந்த இடத்திலும் பேட்டரியை வைத்து, மொபைலின் பேட்டரியை அதிகப்படுத்தி இருக்கிறார்களாம். ஒன்ப்ளஸ் 6-ல் 3300 mAh பேட்டரி எனில் இதில் 3700 mAh பேட்டரி என சொல்லப்படுகிறது. அதிக பேட்டரி என ஒன்ப்ளஸ் உறுதிப்படுத்தி இருந்தாலும்  இன்னும் எத்தனை mAh என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 

oneplus 6T

லோ- லைட் ஃபோட்டோகிராஃபி 

ஆண்ட்ராய்டு மொபைல்களில், கூகுள் பிக்ஸல், சாம்சங் ஹை எண்டு மொபைல்களுக்கு அடுத்தபடியாக சிறப்பான புகைப்படங்களைத் தருவது ஒன்ப்ளஸ்தான். ஒன்ப்ளஸ் 6T-ல் 6 மொபைலை விடவும் லோ லைட் ஃபோட்டோகிராஃபியில் அசத்தலான புகைப்படங்கள் எடுக்க முடியும் என உறுதியளிக்கிறது ஒன்ப்ளஸ். 

One Plus 6T camera sample

ஆண்ட்ராய்டு பை அப்டேட்

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் லேட்டஸ்ட் வரவான பை 9.0 இயங்குதளத்தில் ஒன்பிளஸ் 6T இயங்கவிருக்கிறது. 

 

 

எப்படி வாங்கலாம் ? 

ஒன்ப்ளஸ் 6-ஐப் போலவே, இந்த மொபைலுக்கும் ப்ரீ புக் ஆஃபரை அறிமுகம் செய்திருக்கிறது ஒன்ப்ளஸ். இதற்காக 1000 ரூபாய்க்கு ஒன்ப்ளஸ் 6T கிஃப்ட் கார்டை வாங்க வேண்டும். நவம்பர் 1 அல்லது இரண்டாம் தேதியன்று இந்த கிஃப்ட் கார்டைப் பயன்படுத்தி, ஒன்ப்ளஸ் 6T மொபைலை வாங்க வேண்டும். அப்படி வாங்கும் நபர்களுக்கு, 500 ரூபாய் திருப்பித்தரப்படும், அது அமேசான் பே பேலன்சாக உங்கள் அமேசான் அக்கௌன்ட்டில் சேர்க்கப்படும். பின்னர் ஹெட்செட் வாங்க ஒரு லிங்க்கும் தரப்படும். அதை வைத்து, நவம்பர் 15-ம் தேதியன்று டைப் சி போர்ட் வசதியுடன் கூடிய ஹெட்செட் ஒன்றை இலவசமாகப் பெற முடியும். 


டிரெண்டிங் @ விகடன்