`வெக்கேஷன் மோடு'- வாட்ஸ்அப்பில் வருகிறது புதுவசதி! | WhatsApp to introduce new vacation mode

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (23/10/2018)

கடைசி தொடர்பு:15:15 (23/10/2018)

`வெக்கேஷன் மோடு'- வாட்ஸ்அப்பில் வருகிறது புதுவசதி!

பிக்சர் இன் பிக்சர் மோடு, டார்க் மோடு போன்ற வசதிகளை சமீபத்தில் அறிமுகம் செய்த வாட்ஸ்அப் தற்போது 'வெக்கேஷன் மோடு' என்ற ஒன்றைப் புதிதாக அறிமுகம் செய்யவிருக்கிறது. 

Vacation mode:

இப்போது ஒருவரின் சாட்டை Archive செய்து வைத்தால், வாட்ஸ்அப்பில் இருந்து மறைந்துவிடும். ஆனால், மீண்டும் அந்த நபர் உங்களுக்கு மெசேஜ் செய்தால் அந்த சாட் Archive-ல் இருந்து வெளியே வந்துவிடும். ஆனால், இந்தப் புதிய Vacation Mode-ல் அந்தப் பிரச்னை இருக்காது. இந்த மோடை ஆன் செய்துவிட்டால், Archive-ல் இருக்கும் நபர்களின் மெசேஜ்கள் தொடர்ந்து Archive-லேயே சேமிக்கப்படும். இது க்ரூப் சாட்களுக்கும் பொருந்தும். இந்த வசதியை தற்போது சோதனை செய்துவருகிறது வாட்ஸ்அப். விரைவில் அப்டேட் கிடைக்கும். 

வாட்ஸ்அப்

மற்ற கணக்குகளுடன் இணைப்பு

இதுவரை வாட்ஸ்அப் கணக்கு தனிப்பட்ட சேவையாக மட்டுமே இருந்தது. இந்தப் புதிய அம்சம் மூலம் பயனாளிகள் தங்கள் வாட்ஸ்அப் கணக்குகளை இன்ஸ்டாகிராம் போன்ற பிற சேவைகளுடன் இணைத்துக்கொள்ள முடியும். விரைவில் இது ஃபேஸ்புக், மெஸஞ்சர் போன்றவற்றுக்கும் வரலாம். இந்தச் செய்திகளை WABetaInfo தளம் வெளியிட்டிருக்கிறது.