ஐபோன் பயன்படுத்தியதற்காக பிரபலத்திடம் 3 கோடி கேட்ட சாம்சங்! - என்ன காரணம்? | Samsung sues brand ambassador for using IPhone in public.

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (26/10/2018)

கடைசி தொடர்பு:19:50 (26/10/2018)

ஐபோன் பயன்படுத்தியதற்காக பிரபலத்திடம் 3 கோடி கேட்ட சாம்சங்! - என்ன காரணம்?

ஒரு நிறுவனத்தின் விளம்பர தூதுவர் அதன் போட்டி நிறுவனத்தின் பொருள்களை பொதுவெளியில் பயன்படுத்தி சிக்கிக்கொள்வது அடிக்கடி நடக்கும் ஒன்றுதான். ஆனால், இம்முறை அப்படிச் செய்த ஒரு பிரபலம் மீது வழக்கு தொடர்ந்து சுமார் 3 கோடி ரூபாய் அளவிலான தொகையை இழப்பீடாகக் கேட்டுள்ளது சாம்சங்.

சாம்சங் நிறுவனம் தங்களது போன்களை மக்களிடம் சேர்க்க பிரபலங்களை விளம்பரத்தில் நடிக்கவைப்பதுடன் பொதுவெளியில் தங்கள் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டியும் நல்ல ஒரு தொகையில் ஒப்பந்தம் செய்யும். பிரபல இசை பிரபலம் அடம் லெவின் மற்றும் டென்னிஸ் வீரர் டேவிட் பெரர் போன்ற பிரபலங்கள் அப்படியான சாம்சங் விளம்பர தூதுவர்கள்தான். ஆனால், இவர்கள் பொதுவெளியில் ஆப்பிளின் ஐபோன் பயன்படுத்தியுள்ளனர், இதை மக்கள் விமர்சித்துள்ளனர். ஆனால், சாம்சங் அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டது.

சாம்சங்

இதைத்தொடர்ந்து சமீபத்தில் ரஷ்ய பிரபலமான செனியா சோப்சாக் என்பவரும் இதேபோன்று சாம்சங் நிறுவனத்தால் ரஷ்யாவில் விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தார். இவர் பிரபலமான ரியாலிட்டி டிவி நட்சத்திரம் மற்றும் ஊடகவியலாளர் ஆவார். விளாடிமிர் புதின் ஆசியுடன் அரசியலிலும் களம்கண்டார். சமீபத்தில் ஒரு லைவ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஐபோன் ஒன்றைப் பயன்படுத்தியுள்ளார். முடிந்த அளவு மறைக்க முயற்சி செய்திருந்தாலும் அது ஐபோன் X தான் என்று மக்கள் கண்டுபிடித்து கலாய்க்கத் தொடங்கியுள்ளனர். அவர் இப்படிச் சிக்குவதும் இது முதல்முறை இல்லையாம். இதற்கு மேல் இதைப்போன்ற விஷயங்களில் பொறுமை காக்க முடியாதென அந்தப் பிரபலத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது சாம்சங் நிறுவனம். சுமார் 3 கோடி இழப்பீடு கேட்டுள்ளது அந்த நிறுவனம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க