தோற்றத்தை மாற்றும் ட்விட்டர்! - என்ன ஸ்பெஷல்? | Twitter to change its look

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (29/10/2018)

கடைசி தொடர்பு:16:30 (29/10/2018)

தோற்றத்தை மாற்றும் ட்விட்டர்! - என்ன ஸ்பெஷல்?

முக்கிய சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர், தனது தோற்றத்தை மாற்றும் முயற்சிகளில் செப்டம்பரில் இருந்து ஈடுபட்டு வருகிறது. இதில் தோற்றத்தில் மட்டுமில்லாமல், புதிய வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. சோதனைக்காக சில கணக்குகளுக்கு மட்டும் தற்போதே மாற்றங்கள் செய்து, டெஸ்ட் செய்யப்பட்டுவருகிறது ட்விட்டர். அப்படி எங்களுக்கும் வந்த புது லுக்கில் என்னென்ன புதிய விஷயங்கள் இருக்கின்றன என்று பார்ப்போம்.

ட்விட்டர் Old look

முதலில் நம் கண்ணில் படுவது, இடதுபுறத்தில் நமது ப்ரொஃபைல் தகவல்கள் இல்லாததுதான். மேலும், ட்ரெண்டிங்கில் இருக்கும் விஷயங்கள் வலதுபுறத்தில் உள்ளன. Home, Messages, Moments, Notifications போன்ற பிரிவுகள் தற்போது வெறும் 4 ஐகான்கள் வைத்து மட்டுமே குறியிடப்பட்டுள்ளன. ட்வீட் பட்டன் வலதுபுறத்தின் கீழே வைக்கப்பட்டுள்ளது. Messages பகுதியிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முன்பு போல Pop-up ஆகத் தனியாக வராமல், Preview Pane வடிவில் முழுமையாகப் Messages பகுதி காட்டப்படுகிறது.

ட்விட்டர் New

இது போக, பயனுள்ள 'Data Saver mode' வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதை ஆன் செய்தால், நாம் விருப்பப்படும் புகைப்படங்களை மட்டும் தான் பதிவிறக்கம் செய்யும் ட்விட்டர் மற்றவற்றை விட்டுவிடும். மேலும், ஏற்கெனவே இருக்கும் 'Night Mode' வசதியும் உள்ளது. தற்போது ப்ரௌசர்ஸில் சில பேருக்கு மட்டும் சோதனைசெய்யப்படும் இந்த லுக், விரைவில் அனைவருக்கும் வரலாம். மொபைல் செயலிகளிலும் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க